Rajinikanth: தலைவர் 170ல் ரஜினிக்கு வில்லனாக விக்ரமுக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட் கொடுத்த லைகா?

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Thalaivar 170 update: தலைவர் 170 படத்தில் வில்லனாக நடிக்க தயங்கிய சீயானுக்கு லைகா நிறுவனம் பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க முன்வந்திருக்கிறதாம்.

​தலைவர் 170​ஜெயம்பீம் படம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 170 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அந்த படத்தில் ரஜினிக்கு கெத்தான வில்லனை தேடி வந்தார்களாம். இதையடுத்தே சீயான் விக்ரமை அணுகி நீங்கள் தான் வில்லனாக நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். வில்லனா, நானா என ரொம்ப யோசித்திருக்கிறார் சீயான்.

​Rajinikanth: ரிடையர் ஆகும் ‘மாமன்னன்’ உதயநிதி ஸ்டாலினுக்காக ஒன்று சேரும் ரஜினி, கமல்?
சுஹாசினி”பெண்களை பத்தி யோசிக்க ஆள் இல்ல” நடிகை சுஹாசினி பேச்சு!
​விக்ரம்​இதில் யோசிக்க என்ன இருக்கிறது. அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் தான் சரியான ஆள். சட்டுபுட்டுனு சரினு சொல்லுங்கள் என்றார்களாம். ஓகே சொல்லுங்கள் சீயான், உங்களுக்கு ரூ. 50 கோடியை சம்பளமாக கொடுக்கிறோம் என்றதாம் லைகா நிறுவனம். மாறுபட்ட கதாபாத்திரமாக இருக்கிறதே என தலைவர் 170 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் விக்ரம்.
​சீயான்​ஹீரோக்கள் எல்லாம் விரும்பி வில்லன்களாக நடிக்கத் துவங்கிவிட்டார்கள். நெகட்டிவ் கதாபாத்திரமா நான் நடிக்கிறேன் என்று ஹீரோக்கள் சந்தோஷமாக சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் தான் தன்னை தேடி வந்த வில்லன் வாய்ப்பை ஏற்க யோசித்திருக்கிறார் சீயான் விக்ரம். ஹீரோவாகே பார்த்து மக்கள் பழகி விட்டார்களே, வில்லனாக ஏற்பார்களா என யோசித்திருக்கலாம்.

​Varun Tej: நடிகை லாவண்யாவுக்கும், மெகா குடும்பத்து வாரிசு நடிகருக்கும் ஜூனில் நிச்சயதார்த்தம்

​சம்பளம்​மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் 2 படத்தையும் லைகா தான் தயாரித்தது. அந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்க விக்ரமுக்கு ரூ. 12 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. அவரை அடுத்து ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு அதிகபட்சமாக ரூ. 10 கோடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தலைவர் 170 படத்திற்காக விக்ரமின் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தியிருக்கிறது லைகா நிறுவனம்.

​டிரெண்ட்​வில்லனாக விக்ரம் நடித்தால் நிச்சயம் நன்றாகத் தான் இருக்கும். வில்லத்தனமாக அஜித் குமார் நடித்தார். அதை ரசிகர்கள் கொண்டாடினார்கள். சூர்யாவோ ரோலக்ஸ் சார் எனும் கொடூர கதாபாத்திரத்தில் வந்தார். முதலில் ரோலக்ஸாக நடிக்க விரும்பாத சூர்யா பின்னர் கமலுக்காக நடித்தார். அந்த கதாபாத்திரம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விஜய் சேதுபதியோ தானே ஒரு பெரிய ஹீரோ என்பதையும் தாண்டி பிற ஹீரோக்களின் படங்களில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

​Vijay: அடேங்கப்பா, தளபதி 68 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 150 கோடியா?!

​வரவேற்பு​ஹீரோக்கள் அசால்டாக வில்லனாக மாறிக் கொண்டிருக்கும் நேரத்தில் சீயான் விக்ரமும் சூப்பர் ஸ்டாருக்காக வில்லனாகப் போகிறார். அவரின் இந்த புது முயற்சிக்கு நிச்சயம் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ரசிகர்கள் நிச்சயம் வில்லன் விக்ரமை ஏற்றுக் கொள்வார்கள். வில்லனாகும் சீயானுக்கு ஒரு ஓ போடுங்க.
​மணிரத்னம்​பொன்னியின் செல்வன் 2 படத்தை அடுத்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம். அந்த படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருக்கிறார். முன்னதாக ஏப்ரல் 28ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் பார்த்த அனைவரையும் ஆதித்த கரிகாலன் விக்ரமும், நந்தினி ஐஸ்வர்யா ராயும் தான் கவர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.