பொன்டுகல்லு, ஆந்திராவில் அதிவேகமாக சென்ற லாரி, ஆட்டோ மீது மோதிய விபத்தில், மிளகாய் அறுவடைக்காக சென்ற ஆறு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானாவில் இருந்து, அண்டை மாநிலமான ஆந்திராவின் பால்நாடு மாவட்டத்தில் உள்ள புலிப்பாடு கிராமத்திற்கு, நேற்று ஆட்டோவில் 12 பெண்கள் சென்றனர்.
மிளகாய் அறுவடைக்காக இந்த பெண்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது, அதிவேகமாக வந்த லாரி மோதி கவிழ்ந்தது.
இதில், ஆறு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்; ஆறு பெண்கள் படுகாயம் அடைந்தனர். மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது.
உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார், தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement