அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஆந்தாலாஜி தொடர் ‘மாடர்ன் லவ் சென்னை’. இதனை பாரதிராஜா, ராஜு முருகன், பாலாஜி சக்திவேல், தியாகராஜா குமாரராஜா உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியாகியுள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஆந்தாலாஜி தொடரின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்த மாடர்ன் லவ் தொடரின் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘லாலாகுண்டா பொம்மைகள்’. இதில் ஸ்ரீகெளரி பிரியா, வசுந்தரா வாசுதேவன் முரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த உலகில் ஆண்கள் அனைவரும் ஒன்றுதானா? என்ற கேள்விக்கு விடை தேடுவது தான் இந்த தொடரின் கதை. வசனங்களால் இந்த தொடரில் கவனம் ஈர்த்துள்ளார் ராஜு முருகன்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்த தொடரில் பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள படம் ‘இமைகள்’. அசோக் செல்வன், டிஜே பானு இருவரும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். சில வருடங்களில் பார்வையை இழக்க போகும் காதலி தேவியை திருமணம் செய்து கொள்கிறான் நித்தியா. திருமணத்திற்கு பின்னும் அதே காதல் தொடர்ந்ததா? எல்லா நாளும் இவர்களிடையே சந்தோசம் மட்டுமே நிலைத்திடுமா என்பது தான் கதை. இந்த தொடருக்கு தனது பின்னணி இசையால் உயிர் கொடுத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் இந்த ஆந்தாலாஜியில் இடம்பெற்றுள்ள மற்றொரு தொடர் ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’. திகட்ட திகட்ட காதல் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசைப்படும் ரிது வர்மாவுக்கு காதலில் ஏமாற்றம் மட்டுமே கிடைக்கிறது. அவளுக்கான காதல் கிடைத்ததா இல்லையா என்பதை கலகலப்புடன் சொல்ல முற்பட்டிருக்கு இந்த தொடர்.
விஜய்க்காக கொள்கையை தளர்த்தி கொண்ட வெங்கட் பிரபு: ‘தளபதி 68’ படத்தில் அதிரடி மாற்றம்.!
அக்ஷய் சுந்தர் இயக்கத்தில் இந்த ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள தொடர் ‘மார்கழி’. உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் பிரியமானவர்களை பிரிந்து வாழும் ஹீரோயினுக்கு முதல் காதல் பூக்கிறது. இந்த பதின்பருவக் காதல் அவளை சோகத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்ததா என்பதை எளிமையான காதல் கதையாக சொல்லியுள்ளது ‘மார்கழி’. இசைஞானி இளையராஜா இசையால் இந்த தொடரில் அற்புதம் நிகழ்த்தியுள்ளார்.
‘மாடர்ன் லவ் சென்னை’ ஆந்தாலஜியில் பாரதிராஜா இயக்கத்தில் விவாகரத்தை எப்படி கடக்க வேண்டும் என பேசியுள்ள தொடர் ‘பறவைக் கூட்டில் வாழும் மான்கள்’. கிஷோர், ரம்யா நம்பீசன் நடிப்பில் துணிச்சலான ஒரு முயற்சியாக கவனம் ஈர்க்கிறது இந்த தொடர். இந்த ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள மற்றொரு தொடர் ‘நினைவோ ஒரு பறவை’. காதலை எப்படி அணுகுவது என்பதை தனது பாணியில் இயக்கி கவனம் ஈர்த்துள்ளார் தியாகராஜா குமாராஜா. மொத்தத்தில் வார இறுதியை கொண்டாட சரியான ட்ரீட்டாக அமைந்துள்ளது இந்த ‘மாடர்ன் லவ் சென்னை’.
Sivakarthikeyan: ‘எஸ்கே 21’ படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: அப்செட்டில் சிவகார்த்திகேயன்.!