கரைபுரண்டு ஓடிய 20 ஆறுகள்..9 மரணம்..வீடுகளை விட்டு வெளியேறிய 13,000 பேர்


இத்தாலியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 9 பேர் பலியானதுடன், சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

கனமழையின் கோரமுகம்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் ஆறு மாத கால மழை ஒன்றரை நாளில் பெய்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

மேலும் ஏறக்குறைய 280 நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், ஒரே இரவில் அதிகமான மக்கள் வெளியேற்றங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

கரைபுரண்டு ஓடிய 20 ஆறுகள்..9 மரணம்..வீடுகளை விட்டு வெளியேறிய 13,000 பேர் | 9 Killed Flood In Itlay 13000 Forced Exit Home AP Photo/Luca Bruno

இதன் காரணமாக சுமார் 13,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். எமிலியா – ரோமக்னா பிராந்தியம் வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

9 பேர் பலி

இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு பதிலளிக்க இத்தாலிக்கு ஒரு தேசிய திட்டம் தேவை என பலர் எச்சரிக்கின்றனர்.

கரைபுரண்டு ஓடிய 20 ஆறுகள்..9 மரணம்..வீடுகளை விட்டு வெளியேறிய 13,000 பேர் | 9 Killed Flood In Itlay 13000 Forced Exit Home AFP via Getty Images

இதற்கிடையில், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அரசு வரும் செவ்வாய்கிழமை நெருக்கடியான கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

வெள்ளப்பெருக்கு குறித்து லினோ லென்ஸி என்ற முதியவர் கூறுகையில், ‘நான் இங்கு 70 ஆண்டுகளாக வசித்து வருகிறேன், இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. எங்கு பார்த்தாலும் தண்ணீர் உள்ளது. உள்ளூர் ஆறுகள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை’ என்று அவர் புகார் தெரிவித்தார்.     

கரைபுரண்டு ஓடிய 20 ஆறுகள்..9 மரணம்..வீடுகளை விட்டு வெளியேறிய 13,000 பேர் | 9 Killed Flood In Itlay 13000 Forced Exit Home  

கரைபுரண்டு ஓடிய 20 ஆறுகள்..9 மரணம்..வீடுகளை விட்டு வெளியேறிய 13,000 பேர் | 9 Killed Flood In Itlay 13000 Forced Exit Home

கரைபுரண்டு ஓடிய 20 ஆறுகள்..9 மரணம்..வீடுகளை விட்டு வெளியேறிய 13,000 பேர் | 9 Killed Flood In Itlay 13000 Forced Exit Home Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.