கள்ளச்சாராய விவகாரம்.. இடத்தை மாற்றிய எடப்பாடி.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த ஏக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ள நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் பிடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. இதனால் கள்ளச்சாராயத்தால் உயர்ந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 22 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் திமுக மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கள்ளச்சாராயம் மரணங்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த அதிமுக முடிவு செய்துள்ளது.
அதன்படி வரும் மே 22 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.
இந்த பேரணி குறித்து இன்று காலை அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னை, சின்னமலை, தாலுக்கா அலுவலகம் சாலை, இயேசு கிறிஸ்து சபை அருகில் இருந்து பேரணி துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது வேளச்சேரி சாலை, சைதாப்பேட்டை, சென்னை மாநகர அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் பின்புறம் இருந்து பேரணி தொடங்கும் என திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.