காதலியின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி டார்ச்சர்!!

பெண் ஒருவரை அவரது காதலன் கொடூரமாக தாக்கி அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த நிகுன்ஞ் குமார் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் காதலித்து வந்த நிலையில், அந்த இளைஞருக்கு திருமணமாகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பாட்டு பிரிந்து வாழ்ந்து வருவது அந்தப்பெண்ணுக்கு சமீபத்தில் தான் தெரியவந்தது.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவருடன் சண்டை போட்டுள்ளார். ஏமாற்றப்பட்டதால் அவரிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர், பெண்ணை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் அந்தப்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த அவர், கேபிள் வயர் கொண்டு அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அவரை தாக்கி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், அந்தப்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடிகளை தூவி டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே சொன்னால் நாம் தனிமையில் இருந்த போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

கடுமையாக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் அந்தப் பெண்ணின் காதலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.