காலேஜுக்கு போறேன்.. காலேஜுக்கு போறேன்.. பிளஸ் 2 தேர்வில் கலக்கிய நந்தினி செலக்ட் செய்த கல்லூரி.. ப்பா..

கோவை:
பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்த மாணவி நந்தினி தற்போது கல்லூரியில் சேர்ந்துள்ளார். அவர் எந்தக் கல்லூரியில் சேர்ந்துள்ளார் என்பதுதான் பேசுபொருளாக மாறியுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி தான் சமீபகாலமாக டாக் ஆப் தமிழ்நாடாக மாறி இருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர் முழு மதிப்பெண்ணான 600-க்கு 600 எடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

குறிப்பாக, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் கூட 100-க்கு 100 வாங்கி விடலாம். ஆனால், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்களில் முழு மதிப்பெண் பெறுவது மிக மிக கடினம்.

அப்படியிருக்கையில், அந்தப் பாடங்களிலும் 100-க்கு 100 எடுத்து சாதித்து காட்டினார் நந்தினி. தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு தேர்வு வரலாற்றிலேயே இப்படி ஒருவர் முழு மதிப்பெண்ணையும் பெறுவது இதுவே முதல்முறை ஆகும். சாதாரண கூலி வேலை பார்த்து வரும் அவரது தந்தையின் சொற்ப வருமானத்தில்தான் அவர்களின் குடும்பம் நடந்து வருகிறது. இத்தனை வறுமைக்கு மத்தியிலும் நம்பிக்கையோடு படித்து சாதனை படைத்திருக்கிறார் நந்தினி.

முதல்வர் மு.க. ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, டிஜிபி சைலேந்திர பாபு, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பல தரப்பினரும் சந்தித்து அவரை பாராட்டினார்கள். மேலும், பல தொழிலதிபர்கள், கல்வியாளர்களும் நந்தினிக்கு பாராட்டுகளையும், பரிசுகளையும் வழங்கி வந்தனர். இதனிடையே, பல உயர்கல்வி நிறுவனங்களும், கல்லூரிகளும் நந்தினிக்கு சீட் கொடுக்க போட்டிப்போட்டனர். கல்விக்கட்டணம் முழுவதையும் தாங்களே ஏற்றுக்கொள்வதாக அக்கல்லூரி நிர்வாகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், மாணவி நந்தினி எந்தக் கல்லூரியை தேர்தெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் இருந்தது. இந்த சூழலில், கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரியை மாணவி நந்தினி தேர்வு செய்திருக்கிறார். கோவை பிஎஸ்ஜி கல்லூரி தேசிய அளவில் பிரபலமான கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.