சிட்னியில் நடைபெறவிருந்த குவாட் மாநாடு ரத்து | ஐநா-வின் வெதர் வார்னிங் – உலகச் செய்திகள்

வடக்கு இத்தாலியில் பெய்த கனமழையின் காரணமாக, பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு தொண்டு நிறுவன நிகழ்ச்சியில், இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, வீடு திரும்பிய போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் ஒருவர் அவரின் காரை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார்.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அவரின் ஆதரவாளர்கள் ராணுவ உடைமைகளைத் தாக்கிய வழக்கில், ஒரு தனிப்பட்ட குழு உருவாக்கி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.

உக்ரைனிலிருந்து நெல் உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தை வரவேற்பதாக ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தைத் துருக்கி முன்னெடுத்துச் செயல்படுத்தப்போகிறது.

சிட்னியில் நடைபெறவிருந்த குவாட் அமைப்பின் சந்திப்பை ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனிஸ் ரத்து செய்தார். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ள முடியாததால், இந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

அடுத்த ஐந்தாண்டுகள் (2023-2027) வெப்பமான காலகட்டமாக இருக்கும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 1.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை வரையறையைக் கடக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

போருக்கு மத்தியில் உக்ரைன் சார்பு ‘அரசியல் பிரசார’ சின்னங்களை அகற்றுமாறு வெளிநாட்டு தூதரகங்களை சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது.

கென்யாவின் தொலைதூர ஓட்டப்பந்தய வீரர் ரோனெக்ஸ் கிப்ருடோ (Rhonex Kipruto) ஊக்கமருந்து பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுவதால் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இவர் வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜானி டெப்பின் `Jeanne du Barry’ திரைப்படம் அதிக அளவில் மக்கள் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு சுமார் 5 நிமிடங்கள் மக்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் 30 பட்டியலில் கொரியாவின் பிரபல பாடகரான மைக்கேல் MC Cheung Tin-fu இடம்பெற்றிருக்கிறார். ஆசியா 2023-க்கான இந்த பட்டியலில், 26 வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.