வரும் மே 30ம் திகதி கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி செய்ய உள்ளார். இதனால், மே 30 திகதி முதல் ஜூலை 7ம் திகதி வரை சுக்கிரன் கடகராசியில் சஞ்சரிக்கிறார்.
இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணம், இல்லற சுகத்தை தரப்போகிறார் என்றும், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பை தரப்போகிறார் என்று பார்ப்போம் –
ரிஷபம்
கடக ராசிக்காரர்களே உங்கள் ராசியில் சுக்கிரன் சஞ்சரிகக உள்ளதால், உங்களுடைய நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். சில நண்பர்களால் உங்களுக்கு பிரச்சினை வரக்கூடும். நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் பணிச்சுமை அதிக்க வாய்ப்பு உள்ளது. சுக போகம் குறைய உள்ளது. பொருளாதார நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால், உங்களுக்கு அடிப்படை தேவைக்கான அதிக பண செலவு ஏற்படக் கூடும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சளி, கண் தொடர்பான பிரச்சினைகள் வரக்கூடும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசியில் சுக்கிரன் அஷ்டம ஸ்தானமான 8ம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இதனால், பணம் விஷயத்தில் கொஞ்சம் கவனம் தேவை. தவறான செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் சண்டை வரக்கூடும். இதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அமைதியாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே… கடக ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இதனால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிரிகள் உங்களை மிகவும் தொந்தரவு செய்யக்கூடும். கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். புதிய வேலை தேடுவதை தவிர்க்க வேண்டும்.