ஜல்லிக்கட்டு அனுமதி ஓகே! ஆனால் இதுவும் முக்கியம்.. கொங்கு ஈஸ்வரன் அரசுக்கு வைக்கும் புது டிமாண்ட்!

சென்னை: ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் இதே நேரத்தில் அழிந்து வரும் நாட்டு மாடு மற்றும் காளை இனங்களை தமிழ்நாடு அரசு பாதுகாத்திட வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் புது கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டு மாடு மற்றும் காளை இனங்கள் அழிந்து வருவதால் அதை காக்க வேண்டிய தேவை இப்போது எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த மெரினா புரட்சி தமிழர்களின் ஒற்றுமையை காட்டியது. பள்ளி, கல்லூரி என அனைத்து இடத்திலும் இதற்கான கூக்குரல் விண்ணை எட்டியது.

தமிழர்களின் கலாச்சாரத்தை காக்க இன்று உச்சநீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கொடுத்த தீர்ப்பு மிகவும் வரவேற்புக்குரியது. நமது பழைய கலாச்சாரங்களை மீட்டெடுக்க இது உத்வேகமாய் அமையும்.

தற்போது பால் உற்பத்தியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அந்நிய நாட்டு கலப்பின மாடுகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர். இன்றைய நிலையில் பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் பால் தேவைக்கு நாம் கலப்பின மாடுகளை சார்ந்து தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

Kmdk General Secretary Eswaran has requested that the TN govt should protect the endangered breeds of domestic cows and bulls

அதே நேரத்தில் நாட்டு மாட்டு இனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. இந்த சந்தோசமான நேரத்தில் அழியும் நிலையில் உள்ள சிறப்பு வாய்ந்த பல நாட்டு மாட்டு இனங்களை காத்திட வேண்டுமென்று தமிழ்நாட்டு அரசாங்கத்திடமும், விவசாயிகளிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் அழிந்து வரும் நாட்டு மாடு மற்றும் காளை இனங்களை காக்க ஒரு விரிவான கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.