சென்னை: விஜய்யின் தளபதி 68 படம் குறித்த அப்டேட் தான் கோலிவுட்டின் வைரல் டாப்பிக்காக காணப்படுகிறது.
விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி 68 படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
விரைவில் தளபதி 68 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்திற்காக விஜய்யின் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி 68 – விஜய் சம்பளம்:விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 படம் பற்றிய தகவல்கள் வேற லெவலில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்தை முதலில் அட்லீ இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.
ஆனால், இறுதியாக விஜய்யுடன் வெங்கட் பிரபு இணையவுள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்லீ மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜ், தெலுங்கு இயக்குநர் கோபிசந்த் ஆகியோரின் பெயர்களும் தளபதி 68 இயக்குநர் பட்டியலில் இடம்பெற்றன. இறுதியாக வெங்கட் பிரபு தான் தளபதி 68 படத்தை இயக்கவுள்ளதாகவும், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தளபதி 68 டைம் லூப் பின்னணியில் சயின்ஸ் பிக்ஸன் ஜானர் அல்லது ஆக்ஷன் படமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் விஜய் படம் என்றாலே அதில் பிரம்மாண்டத்திற்கும் பஞ்சமிருக்காது. அதனால், தளபதி 68 படத்திற்காக பல கோடிகளை ஒதுக்க ஏஜிஎஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். முக்கியமாக விஜய்யின் சம்பளம் மட்டுமே பல கோடிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதன்படி விஜய்க்கு 130 முதல் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் விஜய் சம்பளம் மட்டுமே படத்தின் பாதி பட்ஜெட் இருக்கும் என தெரிகிறது. தற்போது நடித்து வரும் லியோ படத்திற்காக 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் விஜய். இந்தப் படம் வெளியாகும் முன்பே பல கோடிகளில் பிஸினஸ் நடந்து வருவதால், தளபதி 68 படத்திற்காக சம்பளத்தை விஜய் உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மாஸ்டர் என்றால் அது விஜய் தான். அதனால், விஜய்யின் சம்பளம், தளபதி 68 பட்ஜெட் என எதிலும் கவலையில்லாமல் களமிறங்கிவிட்டது ஏஜிஎஸ். மேலும், விரைவில் தளபதி 68 படத்தின் அபிஸியல் அப்டேட்டை வெளியிட்டு ப்ரீ தியேட்டர் பிஸினஸை தொடங்கவும் ஏஜிஎஸ் டீம் ரெடியாகிவிட்டதாம்.