திருப்பதி என்றாலே ஏழுமலையான் பக்தர்கள் பலரும் குஷியாகி விடுவர். அதுவும் நடந்தே சென்று தரிசித்தால் புண்ணியம் சேரும் என்றும், வேண்டுதல் நிறைவேறும் என்றும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். ஒருகாலத்தில் நேரில் சென்று டிக்கெட் வாங்கிக் கொண்டு சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இலவச தரிசனத்திற்கு தனி வரிசை. அது இன்றும் வழக்கம் போல் தொடர்ந்து வருகிறது.
திருப்பதி தரிசனம்
மறுபுறம் டிக்கெட் வாங்கும் கட்டண தரிசனம் தற்போது ஆன்லைன் மோடிற்கு சென்று விட்டது. 300 ரூபாய் டிக்கெட்கள் தான் அனைத்து தரப்பினருக்குமான தரிசன முறையாக இருந்து வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://online.tirupatibalaji.ap.gov.in/home/dashboard) சென்று பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட நாளிற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
ஆன்லைன் டிக்கெட்கள்
தற்போதுள்ள நடைமுறையின் படி, அடுத்த மாதத்திற்கான டிக்கெட்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். எந்த தேதி என்பதில் சிறிய மாற்றங்கள் அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. 300 ரூபாய் டிக்கெட்கள் ஒரு நாளிலும், ஆர்ஜித சேவை உள்ளிட்டவற்றின் டிக்கெட்கள் வேறொரு தேதியிலும் விற்பனைக்கு வருகின்றன. இதனால் பக்தர்கள் பலரும் குழப்பம் அடைந்து டிக்கெட்களை தவறவிடும் நிலை ஏற்படுகிறது.
ஏழுமலையான் பக்தர்களுக்கு வசதி
இதுபோன்ற சிக்கலை தவிர்க்கும் வகையில் எந்தெந்த தேதியில் எந்த சேவைக்கான டிக்கெட்கள் கிடைக்கும்? 300 ரூபாய் தரிசன டிக்கெட்கள் எந்த தேதியில் வாங்கலாம்? உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய விரிவான அறிவிப்பை சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இது அனைத்து தரப்பினருக்கும் உதவிகரமான ஒன்றாக அமைந்திருக்கிறது.
சேவைடிக்கெட்கள் வழங்கப்படும் தேதிகுழுக்கள் மூலம் ஒதுக்கப்படும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அபிஷேகம்18 முதல் 20ஆம் தேதி வரை (கட்டணம் செலுத்த 20 முதல் 22 வரை அவகாசம்)ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், தோலோட்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை21ஆம் தேதிமூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் உடன் வரும் பெற்றோர்23ஆம் தேதிஸ்ரீவானி அறக்கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடை வழங்கிய பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட்கள், அங்க பிரதட்சண டோக்கன்கள்23ஆம் தேதி300 ரூபாய் தரிசன டிக்கெட்கள்24ஆம் தேதிதிருமலையில் தங்கும் அறை முன்பதிவு டிக்கெட்கள்25ஆம் தேதி
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய எவ்வளவு நேரம் ஆகிறது? ஏழுமலையான் பக்தர்கள் ஏமாற்றம்!
அங்க பிரதட்சண ஏற்பாடுகள்
திருமலையில் அங்க பிரதட்சணம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புஷ்கரினி எனப்படும் கோயில் கிணறு 24 மணி நேரமும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அங்க பிரதட்சணம் செய்வதற்கான உடைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்டவை உரிய இடத்தில் பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட புதிய அறிவிப்பின் மூலம் பக்தர்கள் எந்தவித குழப்பமும் இன்றி டிக்கெட் முன்பதிவு செய்து திருமலையில் தரிசனம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.