தமிழக அரசியல் தலைவர்களில் மிகுந்த பொறுமை சாலியாக கருதப்படும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டென்சனாகி மைக்கை தூக்கி வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களில் கூட்டணி விவகாரம் தொடங்கி அனைத்திலும் மிகுந்த பொறுமைசாலியாக கருதப்படுபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். செய்தியாளர்கள் என்ன மாதிரியான கேள்வி எழுப்பினாலும் அவர்களிடம் மென்மையை கையாளும் அவரையே மக்கரான சில மைக்குகள் டென்சனாக வைத்த சம்பவம் சிதம்பரத்தில் அரங்கேறி உள்ளது
விசிக சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வீரவணக்க பொதுக்கூட்டம் சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் நடந்தது. நிர்வாகிகள் பேசி முடித்த பின்னர் உரை வீச்சுக்கு தயாரானார் திருமாவளவன். மேடையில் வைக்கப்பட்டிருந்த மைக்கில் இருந்து அதீத சத்தம் வெளிப்படுவதாக கூறி சற்று குறைக்க சொன்னார்
அதன் பின்னர் என்ன நினைத்தாரோ சவுண்டு சர்வீஸ்காரர்… அவர் கொடுத்த எந்த மைக்கிலும் சத்தம் வரவே இல்லை…
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மீறி தனது ஆத்திரத்தை முகபாவணையில் திருமாவளவன் காண்பித்த நிலையில் மீண்டும் அவரது கரங்களுக்கு டப்பா மைக்குகளே வந்து சேர்ந்தது..
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த திருமா, இந்த மைக்கே வேண்டாம் என்று தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது
அதன் பின்னர் சரியான மைக் ஒன்று திருமாவளவனின் கைகளில் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கூட்டத்தில் பேசினார். சில நேரங்களில் சிறு சிறு தவறுகள் கூட பிரபலங்களை கடுமையான சினம் கொள்ள செய்து விடுகின்றது என்பதற்கு பொறுமைசாலியான திருமா, பொங்கி எழுந்த காட்சிகளே சாட்சி..!