போதை ஆசாமியை குடும்பத்தாரே தீர்த்து கட்டிய கொடூரம்!!

போதைக்கு அடிமையான நபரை அவரது குடும்பத்தினரே அடித்து கொலை செய்து தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னாவில் உள்ள அம்பத் தாலுகா பகுதியைச் சேர்ந்த தர்மராஜ் (35) என்பவருக்கு நிர்குன் என்ற மகன் உள்ளார். மது, கஞ்சா போதைக்கு அடிமையான தர்மராஜ், தனது தந்தை நாராயண் சகோதரர் கரண்ராஜ் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் தர்மராஜ் தினமும் போதையில் வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். வீட்டார் கண்டித்தும் அவர் மாறவில்லை. இதனால் அவரது வீட்டார் எரிச்சல் அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம், தர்மராஜ் வழக்கம் போல் கடுமையான போதையில் வந்துள்ளார். அவரது தந்தை, சகோதரர், மகன் ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

அவர்களிடம் தர்மராஜ் தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரத்தில் மூவரும் அவரை கடுமையாக தாக்கினர்.

இதனால் தர்மராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மூவரும் வயலிலேயே தர்மராஜின் உடலை எரித்தனர். ஆனால், அடுத்த சில நாள்களிலேயே உண்மை கசிந்தது.

காவல்துறை தர்மராஜ்ஜின் தந்தை, சகோதரர் மற்றும் மகன் ஆகிய மூவரையும் கைது செய்தது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.