முக்கிய பிராந்தியம் ஒன்றை கலைக்க கனேடிய மாகாண நிர்வாகம் முடிவு


ஒன்றாறியோவின் ஃபோர்டு அரசாங்கம் வியாழன் அன்று பீல் பிராந்தியத்தை கலைக்கும் திட்டத்தை அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சுதந்திர நகரங்களாக மாற வழி

இந்த நடவடிக்கையால் மிசிசாகா மற்றும் பிராம்ப்டன் ஆகிய இரண்டும் சுதந்திர நகரங்களாக மாற வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் கலிடனின் கதி என்னவாக இருக்கும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய பிராந்தியம் ஒன்றை கலைக்க கனேடிய மாகாண நிர்வாகம் முடிவு | Peel Region Ontario Plans To Break Up @CP

மிசிசாகா நகரம் சுதந்திரமாக செயல்படுவதை தாம் விரும்புவதாக பிரீமியர் டக் ஃபோர்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில் தெரிவித்திருந்தார்.
மட்டுமின்றி, பீல் பிராந்தியம் தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகும் எனவும் ஃபோர்ட் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த நவம்பர் மாதம் டர்ஹாம், ஹால்டன், நயாகரா, பீல், வாட்டர்லூ மற்றும் யார்க்கில் உள்ள பிராந்திய அரசாங்கங்களை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளை ஃபோர்டு அரசாங்கம் நியமித்தது.

சுமார் 800,000 மக்கள் வசிக்கும் மிசிசாகா நகரம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் எனவும், இதனால் தொடர்ந்து ஆதரவளிக்கப்படும் எனவும், இங்குள்ள மக்களுக்கு உரிய சேவைகள் தொடர்ந்து அளிக்கப்படும் எனவும் ஃபோர்ட் குறிப்பிட்டிருந்தார்.

வரி செலுத்துவோருக்கு ஆதாயம்

மேலும், மிசிசாகா மேயர் Bonnie Crombie இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளார் எனவும், பீல் பிராந்தியத்தில் இருந்து மிசிசாகா தனியாக செயல்படும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும், இந்த நடவடிக்கையால் அடுத்த 10 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் $1 பில்லியன் அளவுக்கு சேமிக்கப்படும் என்றார்.

இந்த நடவடிக்கையால் பிராம்டன் நகரை ஒதுக்கிவிட வேண்டாம் என நகர மேயர் கோரிக்கை வைத்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.