வாட்சப் மூலம் மெட்ரோவில் எப்படி டிக்கெட் வாங்குவது – மெட்ரோ விளக்கம்.!

வாட்சப் மூலம் மெட்ரோவில் எப்படி டிக்கெட் வாங்குவது – மெட்ரோ விளக்கம்.!

நாட்டிலேயே நான்காவது பெரிய மெட்ரோ அமைப்பு என்றால் அது சென்னை மெட்ரோ தான். இந்த மெட்ரோ ரெயிலை வேலைக்குச் செல்பவர்கள், கல்லூரிக்குச் செல்பவர்கள் என்று தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த மெட்ரோவில் பயணம் செய்பவர்கள் தினமும் ரீசார்ஜ் செய்யும் வகையில், ஏடிஎம் கார்டு வடிவில் இருக்கும் மெட்ரோ பாஸ் எடுத்து பயணிக்கும் வசதி ஏற்கனவே உள்ளது. பயணிகளிடம் இருக்கும் இந்த அட்டையின் பின்புறம் உள்ள கோடு மூலம் பயணசீட்டு கட்டணம் கழித்துக் கொள்ளப்படும்.

இதேபோன்று பயணிகள் மெட்ரோ ரயிலைவிட்டு வெளியே வரும்போதும் அந்த அட்டையை கதவில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்கேனரில் காண்பித்தால் கதவு தானாக திறந்து வழிவிடும். இந்த வசதி மட்டுமல்லாமல், ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணசீட்டு கவுண்டர், கியூஆர் கொடு வசதியும்  செயல்படுகிறது.

இந்நிலையில், பயணிகள் இன்னும் சிரமம் இல்லாமல் இருப்பதற்காக வாட்ஸ்-அப் மூலமாக எளிதாக பயணசீட்டு எடுத்து பயணிக்கும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அறிமுகம் செய்துள்ளது. அதாவது பயணிகள் 8300086000 என்ற எண்ணிற்கு hi என்று குறுஞ்செய்தி அனுப்பினால் உங்கள் விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளுமாறு காட்டுகிறது.

அதில் ஏதோ ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொண்ட பிறகு பயணச்சீட்டை பெறுக, அருகிலுள்ள நிலையம், இதர முறைகள் என்ற விருப்பத் தேர்வுகள் காண்பிக்கின்றன. அதனைப் பயன்படுத்தி நீங்கள் பயணசீட்டை பெற்றுக் கொள்ளலாம். 

சாட்டிங் அடிப்படையில் இந்த புதிய முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. பேடிஎம், ஏர்டெல் உள்ளிட்ட செயலிகளிலும் விரைவில் பயணசீட்டு எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தப்போவதாக சென்னை மெட்ரோ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.