வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரேசில் நாட்டவர் அதோஸ் சலோமி, மேகன் மெர்க்கல் மற்றும் அவருக்கு நேர்ந்த கார் துரத்தல் தொடர்பில் 6 மாதங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேகன் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
6 மாதங்கள் முன்னரே, மேகன் மெர்க்கல் தமது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வாழும் நாஸ்ட்ராடாமஸ் அதோஸ் சலோமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
36 வயதான அதோஸ் சலோமி மறைந்த பிரித்தானிய இளவரசி டயானா தொடர்பில் சிலிர்க்க வைக்கும் பல கணிப்புகளை வெளியிட்டிருந்தார்.
@getty
அத்துடன் மேகன் மெர்க்கல் தொடர்பிலும் அவர் சில கணிப்புகளை குறிப்பிட்டிருந்தார். நியூயார்க் நகரில் ஹரி – மேகன் தம்பதி எதிர்கொண்ட கார் துரத்தல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாழும் நாஸ்ட்ராடாமஸ் அதோஸ் சலோமி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சுமார் 2 மணி நேரம் பாப்பராசி எனப்படும் புகைப்பட கலைஞர்களால் மேகன் மற்றும் ஹரி தம்பதி துரத்தப்பட்டுள்ளனர்.
அந்த சம்பவம் பேரழிவில் முடிந்திருக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்தது எனவும், பாதசாரிகள், வாகனங்கள், மற்றும் பொலிசார் ஆகியோரை மோதும் நிலையில் இவர்களின் வாகனம் அசுர வேகத்தில் பாய்ந்துள்ளது.
ஹரியின் வாழ்க்கையில் வெடிகுண்டு வெடிக்கும்
விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டு, தனியார் விடுதிக்கு திரும்பும் நிலையிலேயே ஹரி- மேகன் தம்பதி பாப்பராசிகளால் துரத்தப்பட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் அதோஸ் சலோமி இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் தம்பதியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணித்திருந்தார்.
@getty
அதில், ஹரியின் வாழ்க்கையில் ஒரு வெடிகுண்டு வெடிக்கும் எனவும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேகன் மெர்க்கல் முன்னெடுக்க தவறினால், அவர் வெறும் வரலாறாக மிஞ்சுவார் எனவும் வாழும் நாஸ்ட்ராடாமஸ் அதோஸ் சலோமி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஹரியின் தாயார், மறைந்த இளவரசி டயானா, தமது வாழ்க்கையின் முடிவு இப்படியே நடக்கும் என்பதை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார் என அதோஸ் சலோமி குறிப்பிட்டுள்ளார்.
Credit: Athos Salomé