12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 47,934 மாணவர்கள் தேர்ச்சிப் பெறவில்லை. இந்நிலையில் அவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி உடனடி சிறப்புத் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.
இந்த துணைத் தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் 11.05.2023 முதல் 17.05.2023 வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 18.05.2023 முதல் 20.05.2023 வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, மாணவர் நலன் கருதி இணையதளம் வழியாக விண்ணப்பிப்பதற்கான நாட்கள் 23.05.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 23.05.2023 வரை விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தில் 24.05.2023 முதல் 28.05.2023 வரையிலான நாட்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகிறது
தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத இருக்கும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள், சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும், தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் காணலாம்.
newstm.in