புதுடில்லி :இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்னை தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், திபெத் எல்லை யில் அதிகளவு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை சீனா நிறுத்தி வைத்துள்ளது, புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லடாக்கில், 2020ல் அத்துமீறி நம் அண்டை நாடான சீனாவின் ராணுவம் நுழைந்தது. இதையடுத்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளும் குவிக்கப்பட்டுள்ளன.
பல சுற்று பேச்சுகளுக்குப் பின், சில இடங்களில் இருந்து படைகள் திரும்பப் பெறபட்டாலும், இரண்டு முக்கிய இடங்களில்படைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன.
இதனால், இந்தியா – சீனா இடையேயான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தன் கட்டுப்பாட்டில் உள்ள நம் நாட்டை ஒட்டியுள்ள திபெத்தில், சீன ராணுவம் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை அதிகளவில் நிறுத்திவைத்துள்ளது.
திபெத்தின் இரண்டு விமானப் படை தளங்களில் சீனா, 40க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள், 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைத்துள்ளது. இது, புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement