வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பீஹாரில் நடந்து வரும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
பீஹாரில், , ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது.இதன்படி, கடந்த ஜன., 7 – 21ல் முதல் கட்டமும், ஏப்., 15ல் இரண்டாவது கட்டமும் துவங்கியது. இது, மே 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்றம், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதித்து, மே 4ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பீஹார் அரசு தொடர்ந்த வழக்கை, நீதிபதிகள் அபய் ஓக்கா, ராஜேஷ் பிண்டல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. இன்று நடந்த விசாரணைக்குப் பின், அமர்வு கூறியுள்ளதாவது:ஜாதிவாரியான, ‘சர்வே’ எனப்படும் விபரம் சேகரிப்பதாக, மாநில அரசு கூறியுள்ளது. ஆனால், ‘சென்சஸ்’ எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் பாட்னா உயர் நீதிமன்றம், ஜூலை 3க்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் வழங்க முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, ஜூலை 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement