சண்டிகர்: பா.ஜ., எம்.பி.,யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71.
ஹரியானாவின் அம்பாலா தொகுதி எம்.பி.,யாக உள்ளார். தொடர்ந்து 3 முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக, சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று( மே 18) காலை 3:30 மணிக்கு சிகிச்சை பலனின்றி ரத்தன் லால் கட்டாரியா காலமானார். அவருக்கு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஹரியானா முதல்வர் கட்டார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement