இருந்தால் முதல்வராகதான் இருப்பேன் என பிடிவாதமாய் இருந்து வந்த டிகே சிவகுமார் திடீரென துணை முதல்வர் பதவிக்கு ஓகே சொன்னதன் காரணம் வெளியாகியுள்ளது.
கர்நாடக முதல்வர்224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. முதல்வர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. MK Stalin: ஜல்லிக்கட்டு தீர்ப்பு… வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.. முதல்வர் ஸ்டாலின்!
தீர்மானம்இதையடுத்து உடனடியாக வெற்றி பெற்ற எம்எல்ஏக்களை அழைத்து கூட்டத்தை நடத்திய காங்கிரஸ் கட்சியினர் முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு மட்டுமே உண்டு என்ற தீர்மானத்தை நிறைவேற்றினர். முதல்வர் பதவிக்காக முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரும் போட்டி போட்டனர். ஆனால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சித்தராமையா முதல்வராகவே ஆதரவு தெரிவித்தனர்.
Kaavya Arivumani: அல்டிமேட்… சீரியல் நடிகை காவியா அறிவுமணியின் வேற லெவல் போட்டோஸ்!
டெல்லி பயணம்
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட அழைப்பின் பேரில் டெல்லி சென்றார் சித்தராமையா. ஆனால் டிகே சிவக்குமார் தனக்கு வயிற்றுவலி எனக் கூறி டெல்லி செல்லவில்லை. தனக்கு பதிலாக தனது சகோதரரை அனுப்பி வைத்தார். ஆனால் டிகே சிவக்குமாருக்காக காத்திருந்த காங்கிரஸ் மேலிடம் மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து ஒரு நாள் தாமதமாக மறுநாள் டெல்லி சென்றார் டிகே சிவக்குமார்.
போட்டிடெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவை தனித்தனியாக சந்தித்துப் பேசிய டிகே சிவக்குமார் தனக்குதான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்க போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார். இதேபோல் சித்தராமையாவும் தனக்குதான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என தனது தரப்பு நியாயத்தை பட்டியலிட்டுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையின் சூப்பர் அறிவிப்பு… ஹேப்பி மோடில் ஆசிரியர்கள்!
டிகே சிவக்குமார் பிடிவாதம்இருவரும் பேசியதை கேட்ட மல்லிகார்ஜூன கார்கே இதுகுறித்து ராகுல் காந்தியிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சித்தராமையாவும் டிகே சிவக்குமாரும் நேற்றுக் காலை ராகுல் காந்தியை தனித்தனியாக சந்தித்து பேசியுள்ளனர். அப்போது சித்தராமையாதான் கர்நாடக முதல்வர் என்பதை அவரிடம் உறுதி செய்த ராகுல் காந்தி டிகே சிவக்குமாரிடம் அவருக்கு துணை முதல்வர் பதவி என பேசியிருக்கிறார் ஆனால் இதனை ஏற்க மறுத்து பிடிவாதமாய் இருந்துள்ளார் டிகே சிவக்குமார்.
Prince Harry: டயானாவுக்கு நடந்தது போலவே.. காரில் துரத்தப்பட்ட இளவரசர் ஹாரி – மேகன் தம்பதி.. பகீர் சம்பவம்!
சோனியா காந்தி வாக்குறுதிஇதனால் கர்நாடக முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நிலவி வந்தது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியா காந்தி, டிகே சிவக்குமாரை அழைத்து பேசியுள்ளார். அப்போது சோனியா காந்தி கொடுத்த சில வாக்குறுதிகளை கேட்ட பின்னரே துணை முதல்வர் பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்தாராம் டிகே சிவக்குமார். அதன்படி டிகே சிவக்குமாருக்கு கர்நாடக மந்திரி சபையில் நிதித்துறை, உள்துறை, வருவாய்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய 4 முக்கிய துறைகளும் டிகே சிவக்குமார் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது ஆதரவாளர்களுக்கும் மந்திரி சபையில் இடம் கொடுக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படியும் ஒரு முதல்வரா… நகரின் வளர்ச்சிக்காக அப்பாவின் சமாதியை அகற்றிய நவீன் பட்நாயக்!