Electric Scooter Price hike – ₹ 30,000 வரை எலக்டரிக் ஸ்கூட்டரின் விலை உயரப்போகிறதா.?

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைக்கு கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள தயாரிகாகி வருகின்றது. இந்திய அரசு வழங்கி வரும் FAME-II மானியம் ₹ 2,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்த மானியம் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

கடந்த 18 மாதங்களாக வழங்கப்பட்டு வந்த Faster Adoption and Manufacturing of Hybrid and Electric Vehicles (FAME-II) மானிய தொகை முழுமையாக நிறைவடைந்துள்ளால், புதிய பேட்டரி மின்சார இரு சக்கர வாகனம் வாங்குபவர்களின் விலை உயரக்கூடும். குறிப்பாக ஹீரோ விடா வி1 புரோ மாடலுக்கு  ₹ 60,000 மானியம் வழங்கப்பட்டு வருகின்றது. மானியம் முழுமையாக நிறுத்தப்பட்டால் ஸ்கூட்டரின் விலை ₹ 2,00,000 உயரக்கூடும்.

எல்க்ட்ரிக் ஸ்கூட்டருக்கு FAME-II மானியம்

இருசக்கர மின்சார வாகன முன்னெடுப்பு மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதத்தில் மானிய உதவி முற்றிலும் திரும்பப் பெறப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, கனரக தொழில்துறை அமைச்சகம் மூன்று மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பயன்படுத்தப்படாத நிதியிலிருந்து E2W களுக்கு கூடுதலாக ரூ.1,500 கோடியை ஒதுக்க முடிவு செய்துள்ளது.

எனவே, இந்த புதிய திட்டத்தின் கீழ் டூவீலர்கள், மானிய முறை திருத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் 1, 2023 முதல் E2W விலை கணிசமாக அதிகரிக்கும்.

புதிய எலக்ட்ரிக் டூ வீலருக்கு மானியம் எவ்வளவு ?

கனரக தொழில்துறை அமைச்சகத்தின் தலமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 24 எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளர்களுடன் கலந்து பேசி மானியத்தை குறைத்துள்ளனர்.

நடைமுறையில் உள்ள FAME-II மானியம் kWh ஒன்றுக்கு ரூ. 15,000க்கு பதிலாக இனி ஒரு kWh பேட்டரி திறனுக்கு ரூ.10,000 ஆக குறைக்கப்பட உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 40 சதவீத மானியத்துடன் ஒப்பிடும்போது, E2W இன் முன்னாள் தொழிற்சாலை செலவில் (ரூ. 1.50 லட்சத்தை தாண்டக்கூடாது) இனி 15 சதவீதமாக மட்டுமே இருக்கும். எனவே, விலை உயர்ந்த எல்க்ட்ரிக் 2 வீலர் தயாரிப்பாளர்கள் விலை வரை உயரக்கூடும்.

புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் முன்னணி இருச்சகர வாகன தயாரிப்பாளர்களான ஓலா எலக்ட்ரிக், ஏதெர் எனெர்ஜி,  ஹீரோ விடா, பஜாஜ் ஆட்டோ சேட்டக் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப், டாரக் க்ரோட்டோஸ் உள்ளிட்ட பல்வேறு 24க்கு மேற்பட்ட நிறுவன மாடல்கள் பேட்டரி திறனை பொறுத்து விலை மாறுபடும். ஆனால், இங்கே குறிப்பிட்டுள்ள சில முன்னணி நிறுவனங்களின் விலை ₹ 30000 முதல் ரூ.40,000 வரை உயருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

குறிப்பாக, ஏதெர் 450X மாடலுக்கு ரூ.55,000 மானியம் வழங்கப்படுகின்றது. புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால், இனி மானியம் ரூ. 32,500 மட்டுமே வழங்கப்படும். எனவே ஸ்கூட்டரின் விலை 22,500 வரை உயரக்கூடும்.

ஓலா எஸ்1 மற்றும் எஸ்1 புரோ மானியம் ரூ.22,000 முதல் ரூ.37,000 மட்டுமே வழங்கப்படும்.

அடுத்து ஹீரோ விடா வி1 புரோ மானியம் ரூ.37,500 மற்றும் வி1 பிளஸ் ரூ.28,500 ஆக குறையலாம். இறுதியாக, டிவிஎஸ் மோட்டார் ஐக்யூப் மானியம் ரூ.28,500 மற்றும் பஜாஜ் சேட்டக் ரூ.22,500 ஆக குறையலாம்.

புதிய நடைமுறை செயல்படுத்தப்படுமா ? அல்லது முழுமையாக மானியம் தவிர்க்கப்படும் என்பது குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.

மேலும், மிக முக்கியமாக FAME-II மானிய திட்டம் மார்ச் 31, 2024 அன்று முடிவடைய உள்ளது. மேலும் இந்தத் திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.