F1 பந்தயம் ரத்து… மொத்த நகரத்தையும் மூழ்கடித்த பிரளயம்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்


இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா பிராந்தியத்தில் கன மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 8 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் ஏராளமானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

23 நகரங்களில் பெருவெள்ளம்

சுமார் 10,000 பேர்கள் வரையில் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கூரை மீதேறியிருந்த சிலரை ஹெலிகொப்டர் மூலமாக அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

F1 பந்தயம் ரத்து... மொத்த நகரத்தையும் மூழ்கடித்த பிரளயம்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் | Imola Race Cancelled Deadly Deluge Italy Flood @epa

எமிலியா-ரோமக்னா பிராந்தியத்தில் கன மழையால் 14 நதிகள் கரைபுரண்டுள்ளதாகவும், 23 நகரங்களில் பெருவெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ரவென்னா நகர மேயர் தெரிவிக்கையில், தனது நகரம் இப்போது அடையாளம் காண முடியாத நிலையில் பெருவெள்ளத்தில் மூழ்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.

F1 பந்தயம் ரத்து... மொத்த நகரத்தையும் மூழ்கடித்த பிரளயம்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் | Imola Race Cancelled Deadly Deluge Italy Flood @AP

இந்த நிலையில், இந்த வார இறுதியில் முன்னெடுக்கப்பட இருந்த எமிலியா-ரோமக்னா F1 கிராண்ட் பிரிக்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இமோலாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பந்தய அமைப்பாளர்களுக்கு இடையே புதன்கிழமை நடந்த ஆலோசனை கூட்டத்தில், நிகழ்வை தொடர முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

மழை நீடிக்கும் என்றே வானிலை ஆய்வு மையம்

மட்டுமின்றி, வரும் நாட்களில் மழை நீடிக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, செசெனா நகரில், குடியிருப்பாளர்கள் கூரையின் மேல் ஏறி ஹெலிகொப்டர் அல்லது படகு மூலம் மீட்க காத்திருந்தனர்.

F1 பந்தயம் ரத்து... மொத்த நகரத்தையும் மூழ்கடித்த பிரளயம்: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் | Imola Race Cancelled Deadly Deluge Italy Flood @EPA

கன மழை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எமிலியா-ரோமக்னா முழுவதும் உள்ள ஜிம்கள் மற்றும் பள்ளிகளில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி முன்னெடுத்த சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த மீட்புப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.