வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாட்ரிட்: காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடால் இன்று அறிவித்துள்ளார்.
கிராண்ட் ஸ்லாம் வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் இன்னும் குணமாகவில்லை. எனவே பிரெஞ்ச் ஓபனிலிருந்து விலகுகிறேன். 2024 டென்னிஸ் தொடர் எனக்கு கடைசி தொடராக இருக்கும் என்றார்.
36 வயது ரபேல் நடால், சர்வதேச டென்னிஸ் அரங்கில் இதுவரை 22 கிராண்ட் ஸ்லாம் என பல்வேறு சாம்பியன்ஸ் பட்டங்களை வென்றுள்ளார். 2024- தொடர் தனக்கு கடைசியாக இருக்கும் என ஒய்வு பெறப்போவதை அறிவித்துள்ளது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement