இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. ஆனால் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதமே தான் துவங்கியது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தால் ஜெயிலர் படத்தின் கதையில் கூடுதல் கவனம் செலுத்தினார் நெல்சன். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பவேண்டும் என்ற கட்டாயத்தில் நெல்சன் இருக்க ரஜினிக்கும் அதே நிலை தான் உள்ளது.
Jailer: ஜெயிலர் டீசர் ரிலீஸ் எப்போது ? வெளியான வெறித்தனமான அப்டேட்..!
சமீபகாலமாக ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுக்கவேண்டும் என தீவிரமாக இருக்கின்றார் ரஜினி. இதன் காரணமாக இப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் இருவரும் பார்த்து பார்த்து செய்து வந்தனர்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கி நடைபெற்று வருகின்றது. ரஜினி தற்போது லால் சலாம் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருவதால் அவரை தவிர மற்ற நடிகர்கள் ஜெயிலர் படத்திற்கு டப்பிங் கொடுத்து வருகின்றனர்.
லால் சலாம் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரஜினி ஜெயிலர் படத்திற்கு டப்பிங் கொடுப்பார் என்றும், அதன் பிறகு படத்தின் டீசர் வெளியாகும் என்றும் தெரிகின்றது. இதையடுத்து ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
என்னதான் ரஜினிக்கு ஆகஸ்ட் மாதம் ராசியில்லை என்பது போல பல பேச்சுக்கள் இருந்தாலும் படத்தின் மீது ரஜினி வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக ஆகஸ்ட் மாதமே படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளார் ரஜினி.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை மாதத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படத்திற்கு ஆடியோ லான்ச் நடைபெறாத நிலையில் அந்த குறையை ஜெயிலர் படம் பூர்த்தி செய்ய இருக்கின்றது.
இந்நிலையில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர்கள் சிலரை சிறப்பு விருந்தினராக அழைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஹிந்தி உட்பட தென்னிந்திய மொழிகளில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் நடிகர்களை ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழில் இருந்து யார் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அநேகமாக தனுஷ் அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருவதாலும், அவர் தீவிரமான ரஜினியின் ரசிகர் என்பதாலும் அவர் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகின்றது.
மேலும் நெல்சன் ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷின் படத்தை இயக்குவதாக இருப்பதால் கண்டிப்பாக தனுஷ் இவ்விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது.