சென்னை: அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வரும் மே 26ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சமீபத்தில் அந்த படத்தை பார்த்த தயா அழகிரி படம் எப்படி இருக்கு என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவை பார்த்த தயா அழகிரி அருள்நிதியின் நடிப்பு குறித்தும் கழுவேத்தி மூர்க்கன் என்ன மாதிரியான படம் என்பது குறித்தும் விரிவாக கொடுத்துள்ள விமர்சனம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன்: இயக்குநர் பாண்டிராஜின் வம்சம் படத்தின் மூலம் அறிமுகமான அருள்நிதி வித்தியாசமான த்ரில்லர் வகையறா கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த நிலையில், மீண்டும் ஒரு கிராமத்து பாணி படத்தில் நடித்து மிரட்டி உள்ளார்.

இயக்குநர் கெளதமராஜா இயக்கத்தில் அருள்நிதி கொடுவா மீசையெல்லாம் வைத்துக் கொண்டு கிராமத்து இளைஞனாகவே இந்த படத்தில் மாறி உள்ளார் அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் செம போல்டாக நடித்த துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
தயா அழகிரி கொடுத்த விமர்சனம்: கழுவேத்தி மூர்க்கன் படத்தை நேற்று இரவு பார்த்தேன் படம் கண்டிப்பாக பெரிய வெற்றிப்படமாக அமையும். இந்த கிராமத்து படம் உங்களை நிச்சயம் மகிழ்விக்கும், அதன் காட்சிகளும், கதையும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.

படத்தின் கிளைமேக்ஸ் தான் டாப் நாட்ச் என்று சொல்லலாம். நடிகர் சந்தோஷ் பிரதாப் இந்த படத்திலும் செம வில்லனாக நடித்துள்ளார். அருள்நிதியின் நடிப்பு தனி மைல் கல் என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உள்வாங்கி படத்தையும் மொத்தமாக தாங்கிப் பிடித்துள்ளார். எப்போதுமே நல்ல கதைகளை தேர்வு செய்து ரசிகர்களுக்கு சூப்பரான படத்தை கொடுப்பதை நினைத்து பெருமையாக உள்ளது.
இசையமைப்பாளர் டி. இமான் இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். பாடல்கள் மற்றும் பின்னணி இசை என அனைத்திலும் மிகப்பெரிய பலமாக படத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்துள்ளார்.

இயக்குநர் கெளதமராஜா ஒரு தரமான க்ரிப்பிங் படத்தை கொடுத்துள்ளார். நிச்சயம் படம் வெளியானதும் தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நினைக்கிறேன் என படம் பற்றிய தனது கருத்தை சொல்லி உள்ள தயா அழகிரி படக்குழுவினரை வாழ்த்தி உள்ளார்.
