Leo: விஜய் ஒரு குழந்தை மாதிரி: லியோ செட்டில் என்ன செஞ்சிருக்கார்னு பாருங்க

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஜய், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகளை படமாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

“மறைவுக்கு முன்னாடி எடுத்த Selfie” வையாபுரி உருக்கம்!
லியோவில் இயக்குநர்கள் கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய் பற்றி மிஷ்கின் கூறியிருப்பதாவது,

நாங்கள் இருவரும் சேர்ந்து யூத் படத்தில் வேலை செய்தபோதே விஜய் ஒரு டாப் லெவல் ஸ்டார். தற்போது அவர் ஒரு ஸ்டார்.

லியோ படப்பிடிப்பில் கலந்து கொள்ள நான் சென்றபோது உணவக செட் போட்டிருந்தார்கள். சேர்கள், மேஜைகள் நிறைய இருந்தன. அவற்றுக்கு அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தார் விஜய். என்னை பார்த்ததும் ஸ்மைல் செய்தார்.

Vijay: அட, விஜய் பற்றி கேள்விப்பட்டது உண்மை தான்: லியோ ஷூட்டிங்கில் நடந்த க்யூட் சம்பவம்

நாற்காலிகள், மேஜைகள் நிறைய இருந்ததால் அவற்றை சுற்றிக் கொண்டு செல்ல விரும்பவில்லை. அதனால் சேர்களில் ஏறி சென்றேன். நான் அப்படி வருவதை பார்த்த விஜய் தன் இரண்டு கைகளையும் நீட்டி என்னை ஹக் செய்தார். அவர் ஒரு ஸ்டார் மாதிரி இல்லை, குழந்தை மாதிரி இருந்தார் என்றார்.

விஜய்க்கு என்ன தான் இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருந்தாலும் அவர் இன்னும் ஒரு குழந்தை போன்று தான் இருக்கிறார். பந்தா கிடையாது, க்யூட் ஸ்மைல், குழந்தை மாதிரி சந்தோஷப்படுவதுமாக இருக்கிறார் என அவருடன் சேர்ந்து வேலை செய்தவர்கள் சொல்வது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தான் மிஷ்கினும் அப்படியே சொல்லியிருக்கிறார்.

லியோ படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. சென்னையை அடுத்து ஹைதராபாத் சென்று கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கவிருக்கிறாராம் லோகேஷ். அதற்காக ஹைதராபாத்தில் இருக்கும் ஃபிலிம் சிட்டியில் விமான நிலைய செட் போடப்பட்டு வருகிறதாம்.

படம் குறித்து எந்த அப்டேட்டும் கொடுக்காமல் அவர் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார் லோகேஷ். இந்நிலையில் லியோ ஷூட்டிங்ஸ்பாட்டில் நடந்தது பற்றி மிஷ்கின் தெரிவித்தது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

Vidaa Muyarchi, Leo: லியோ, விடாமுயற்சிக்கு இடையே இப்படியொரு ஒற்றுமையா!: தியேட்டர் அதிரப் போகுது

லியோ படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷாவும், மற்றொரு விஜய்க்கு ஜோடியாக ப்ரியா ஆனந்தும் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்யவில்லை.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

லியோ படத்தின் கதை எல்.சி.யூ. தான் என நம்பப்படுகிறது. ஆனால் கதையை மட்டும் சொல்ல மாட்டேனே என தன் வேலையை மட்டும் பார்க்கிறார் லோகேஷ். இதற்கிடையே லியோவில் லோகேஷின் எல்.சி.யூ.வில் இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பதாக பேச்சு கிளம்பியது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் கேட்டதற்கு, நான் லியோ படத்தில் நடிக்கவில்லை. விக்ரம் படத்தில் நான் பயன்படுத்திய கண்ணாடி புகைப்படத்தை ரத்னா ஏன் வெளியிட்டான் என தெரியவில்லை என கூறினார்.

Leo:லியோ பற்றிய உண்மையை சொன்ன விஜய் சேதுபதி: ஆனாலும் சந்தேகப்படும் ரசிகர்கள்

லியோ படத்தின் கதையை லோகேஷ் சொல்லாவிட்டாலும் அது எல்.சி.யூ. என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அந்த எல்.சி.யூ.வில் உலக நாயகன் கமல் ஹாசன் இருக்கிறார். அதனால் லியோவில் கமல் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.