சென்னை: மாடர்ன் லவ் ஆந்தாலஜியில் தியாகராஜ குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவையை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பாராட்டியிருக்கிறார்.
மாடர்ன் லவ் சென்னை என்கிற ஆந்தாலஜி வெப் தொடரை இயக்குநர்கள் பாரதிராஜா, ராஜுமுருகன், பாலாஜி சக்திவேல், தியாகராஜா குமாரராஜா, அக்ஷய் சுந்தர், கிருஷ்ணகுமார் ராம்குமார் ஆகிய ஆறு இயக்குநர்கள் இயக்கியிருக்கின்றனர். இந்த ஆந்தாலாஜி தொடரானது மொத்தம் 6 அத்தியாயங்களை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லாலா குண்டா பொம்மைகள்: இந்த வெப் தொடரின் முதல் அத்தியாயமாக லாலா குண்டா பொம்மைகள் உருவாகியிருக்கிறது. இதனை குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் ஷான் ரால்டன் இசையமைத்திருக்கிறார். வாசுதேவன் முரளி, ஸ்ரீ கௌரி பிரியா, வசுந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
இமைகள்: இதன் இரண்டாவது அத்தியாயமாக இமைகள் உருவாகியிருக்கிறது. இதனை கல்லூரி, காதல் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த பாலாஜி சக்திவேல் இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அசோக் செல்வன், டிஜே பானு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்கும் எமோஜி: மூன்றாவது அத்தியாயமாக ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ உருவாகியிருக்கிறது. இதனை கிருஷ்ணகுமார் ராம்குமார் என்பவர் இயக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சம்யுக்தா விஸ்வநாதன், ரிது வர்மா, பவன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதற்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்..
மார்கழி: நான்காவது அத்தியாயமாக மார்கழி உருவாகியிருக்கிறது. இதனை அக்ஷய் சுந்தர் என்பவர் இயக்க இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா தயாள், சஞ்சுளா சாரதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இதற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
பறவை கூட்டில் வாழும் மான்கள்: ஆந்தாலஜியின் ஐந்தாவது அத்தியாயத்தை பாரதிராஜா இயக்கியிருக்கிறார். அதற்கு ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்திருக்கிறார். விஜயலட்சுமி, ரம்யா நம்பீசன், கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
நினைவோ ஒரு பறவை: அதேபோல் தியாகராஜா குமாரராஜா இயக்கியிருக்கும் ஆறாவது அத்தியாயத்துக்கு நினைவோ ஒரு பறவை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாமிகா, பீபி உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த அத்தியாயத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த ஆந்தாலஜியானது அமேசான் ப்ரைம் வீடியோவில் நாளை வெளியாகவிருக்கிறது.
நெல்சன் பாராட்டு: இந்நிலையில் ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கும் நெல்சன் திலீப்குமார்; ஆந்தாலஜியில் தியாகராஜா குமாரராஜா இயக்கியிருக்கும் நினைவோ ஒரு பறவையை பாராட்டியிருக்கிறார். அதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலாஜியில் தியாகராஜா குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை பார்த்தேன். ஒரு காதல் கதையை மிக அருமையாக அணுகியிருக்கிறார்கள்.
காட்சிகள் அனைத்தும் மேஜிக்கலாக இருக்கின்றன. அதேபோல் டெக்னிக்கலாகவும் ரொம்பவே புத்திசாலித்தனமாக இருக்கிறது. நடிகர்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக பாருங்கள் மிஸ் செய்துவிடாதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.