வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு : உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் அரசு, நீதி வழங்க தவறி விட்டதாக, இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவித்தனர்.
நம் அண்டை நாடான இலங்கையில், உள்நாட்டுப் போர் நிறைவடைந்து, நேற்றுடன் 14 ஆண்டுகள் முடிவடைந்தன. ஒவ்வொரு ஆண்டும் மே 18ல், போரில் வெற்றி பெற்றதை அரசுப் படைகள் கொண்டாடும் வேளையில், அதில் உயிரிழந்த தமிழர்களுக்கு, இலங்கை தமிழர்கள் மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன்படி நேற்று, போரில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து, முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆயிரக் கணக்கான இலங்கை தமிழர்கள் பங்கேற்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதன் பின், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் இணைத் தலைவர் அருட்தந்தை லியோ கூறியதாவது: இந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்ட ஒவ்வொரு தமிழ் உறவுகளையும் நினைவு கூர்கிறோம். இந்த அநீதிக்கு துணை போனவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எங்கள் மக்களை படுகொலை செய்ய காரணமாக இருந்தவர்கள், நீதிமன்றங்களின் முன்னிலையில் சர்வதேச சட்டங்களின்படி தண்டிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும். இது நினைவேந்தல் நிகழ்ச்சி மட்டுமல்ல; எதிர்ப்பை வெளிப்படுத்தும் ஒரு அறவழி போராட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement