சென்னை : ஓடும் பேருந்தில் நடிகையிடம் அசீங்கமாக நடந்து கொண்ட இளைஞரை துணிச்சலுடன் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
கேரள மாநிலம், கொச்சி அங்கமாலி பகுதியைச் சேர்ந்தவர் நந்திதா சங்கரா.
மாடல் அழகியும், நடிகையுமான இவர் ஒரு சில படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து வருகிறார்.
கேரள நடிகை : நடிகை நந்திதா சங்கரா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்துக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தில் சென்றிருக்கிறார். அப்போது அவரது அருகில் பயணித்த இளைஞர் ஒருவர் அவரை உரசிக்கொண்ட வந்துள்ளார். இந்த நபரின் செய்கையால் கடுப்பான நடிகை சற்று பெருமையான அந்த நபர் உரசாதபடி தள்ளி அமர்ந்துள்ளார்.
ஓடும் பேருந்தில் : அப்போதும் அந்த நபர் பேருந்து என்று கூட பார்க்காமல், திடீரென தனது பேன்ட் ஜிப்பைத் திறந்து மிகவும் அசீங்கமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பொருமையை இழந்த அந்த நடிகை, போனை கையில் வைத்து வீடியோ எடுத்துக்கொண்டே அந்த நபரின், என்னடா பண்ண என்று கேட்டுக்கொண்டே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தப்பி ஓட முயன்ற இளைஞர் : இவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொண்டதால், பேருந்தே களேபரமான நிலையில், பேருந்தின் நடத்துனர் அந்த நபரை விசாரித்த போது, அந்த நபர் தவறு செய்தது தெரியவந்ததை அடுத்து பேருந்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, அந்த நபரைப் பிடிக்க முயன்றார் நடத்துனர். ஆனால், அந்த இளைஞர் நடத்துனரை தள்ளிவிட்டு பேருந்திலிருந்து இறங்கி ஓடிவிட்டார்.
போலீசார் கைது செய்தனர் : இதையடுத்து, இந்த சம்பவம் நடந்த நெடும்பாசேரி பகுதி போலீஸார் வழக்கு பதிவுசெய்து, அந்த இளைஞர் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஸவாத் எனத் தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, நடிகை நந்திதா வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நடிகையின் செயலுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இளம் நடிகையின் துணிச்சலான நடவடிக்கைக்கும், தக்க சமயத்தில் உதவிய நடத்துனருக்கும் பாராட்டு குவிந்துவருகிறது.
குவியும் பாராட்டு : பேருந்தில் இளம் நடிகையிடம் மோசமாக நடந்த வாலிபரை, சட்டத்தின் பிடியில் கொண்டுசெல்லும் விதமாக கே.எஸ்.ஆர்.டி.சி அங்கமாலி யூனிட்டின் நடத்துனர் பிரதீப்பும், ஓட்டுநர் ஜோஷியும் சமயோஜிதமாகச் செயல்பட்டதற்கு கேரள போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ பாராட்டு தெரிவித்துள்ளார்.