கனடா பிரதமர் ட்ரூடோவின் ஒற்றை புகைப்படம்: இரு நாடுகளில் வெடித்த சர்ச்சை


தென் கொரியாவில் அரசியல் பிரமுகர் ஒருவருடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முகம் காட்டிய புகைப்படம் ஒன்று தற்போது இரு நாடுகளிலும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

பூகம்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமுடி தொடர்பான தகவல் சர்வதேச தலைப்புச் செய்தியானது, அவரது தடுமாற்றமான கைகுலுக்கல்கள் மற்றும் கமெரா அருகில் இருக்கும்போது சட்டையின்றி தோன்றுவதும் பலமுறை சர்ச்சையாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது தென் கொரிய அரசியல் பிரமுகர் ஒருவருடன் பிரதமர் ட்ரூடோ முகம் காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது கனடாவில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் G7 உச்சிமாநாடுக்கு முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக ட்ரூடோ மற்றும் கனேடிய அமைச்சர்கள் குழு தென் கொரியாவிற்கு சென்றுள்ளனர்.

அத்துடன், பல பில்லியன் டொலர் பேட்டரி ஆலை ஒப்பந்தத்தை காப்பாற்றும் முயற்சியும் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் தேசிய சட்டமன்றத்தில் உரையாற்றும் முன்னர், சபாநாயகர் கிம் ஜின்-பியோ உட்பட கொரிய அரசியல்வாதிகளுடன் பிரதமர் ட்ரூடோ புகைப்படங்களுக்கு முகம் காட்டினார்.

புகைப்படம் எடுத்துக்கொள்ளும் முன்னர் இரு தலைவர்களும் தங்கள் உயரம் தொடர்பில் கிண்டலடித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் தான் சபாநாயகர் கிம் உயரத்திற்கு எட்ட, தமது கால்கள் இரண்டையும் பரப்பி வைத்துள்ளார் ட்ரூடோ.

கொரிய பத்திரிகைகள் புகழாரம்

இதுபோன்ற செயலுக்கு தென் கொரியாவில் manner legs என பாராட்டுகிறார்கள்.
அதாவது இரண்டு நபர்களிடையே உயரத்தை சமன் செய்வதைக் குறிக்கிறது. கனடா பிரதமரின் இந்த செயலை கொரிய ஊடகங்கள் பெருமையாக பேசியுள்ளது.

இது அக்கறை கொண்ட குணம் எனவும் பிரபல தென் கொரிய பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளன.
ஆனால் கனடாவில் இதற்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. வழக்கம் போல் பிரதமர் ட்ரூடோ வெளிநாட்டில் இருக்கும் போது கனடாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார் என விமர்சிக்கப்பட்டுள்ளார்.

கனடா பிரதமர் ட்ரூடோவின் ஒற்றை புகைப்படம்: இரு நாடுகளில் வெடித்த சர்ச்சை | Trudeau Pose Korean Politician Splits Critics @EPA

பிப்ரவரி மாதம் தமது கடும் விமர்சகரான ஆல்பர்ட்டா முதல்வர் Danielle Smith-ஐ சந்தித்த ஜஸ்டின் ட்ரூடோ, அவருடன் கைகுலுக்கியது தடுமாற்றத்துடனான மோசமான செயல் என விமர்சிக்கப்பட்டது.

2017ல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பின் போதும், கைகுலுக்கும் விவகாரம் விமர்சிக்கப்பட்டது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.