கர்நாடகா அமைச்சரவை பட்டியல்… யாருக்கெல்லாம் இடம்? 2 குழுக்களாக பதவியேற்க ஏற்பாடு!

கர்நாடகாவில் மே 20ஆம் தேதி காலை காங்கிரஸ் ஆட்சி (Karnataka Congress) பொறுப்பேற்கிறது. முதலமைச்சராக சித்தராமையா (Siddaramaiah), துணை முதலமைச்சராக டிகே சிவக்குமார் (DK Shivakumar) ஆகியோர் பதவியேற்கின்றனர். இதையொட்டி தேசிய அளவில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அடங்குவார்.

கர்நாடகா முதலமைச்சர்

முதலமைச்சர் நாற்காலிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையில் கடும் போட்டி நிலவிய சூழலில், இவர்களை சமாதானப்படுத்த கட்சி மேலிடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஒருவழியாக சோனியா காந்தி அறிவுறுத்தலின் பேரில் டிகே சிவக்குமார் இறங்கி வர விஷயம் சுமூகமாய் முடிந்தது. அடுத்து அமைச்சரவை பட்டியலை தயாரிக்கும் வேலையில் கட்சி மேலிடம் மும்முரம் காட்டி வருகிறது.

அமைச்சரவை பட்டியல்

இதிலும் பெரிய சிக்கல் காத்திருக்கிறது. ஏனெனில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடமளிக்க வேண்டும். ஏற்கனவே சிரமப்பட்டு டிகே சிவக்குமாரை துணை முதலமைச்சர் நாற்காலிக்கு சம்மதம் தெரிவிக்க வைத்தனர். அதில் முக்கியமான துறைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அடங்கும். எனவே மிகவும் கவனமாக எந்தவித அதிருப்தியும் எழாமல் அமைச்சரவை பட்டியலை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு குழுக்களாக பதவியேற்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் பதவியேற்கப் போகும் அமைச்சர்களின் உத்தேச பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் புதிய அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இரண்டு கட்டங்களாக அமைச்சர்கள் பதவியேற்க இருக்கின்றனர். இந்த பட்டியலில் யாரெல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

முக்கியத் தலைவர்களுக்கு வாய்ப்பு

இதுதவிர சலிம் அகமது, நசீர் அகமது, மஞ்சுநாத் பண்டாரி, தினேஷ் கோலிகவுடா, எஸ்.ரவி, கே.ஜே.ஜார்ஜ், பிரியங்க் கார்கே, ரூபா சசிதர், பி.ஆர்.ரெட்டி, தன்வீர் சையத், கிருஷ்ண பைரே கவுடா உள்ளிட்டோரும் இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது. கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழா நாளை நடைபெறும் நிலையில் அன்றைய தினமே அமைச்சரவை பட்டியலும் வெளியாகலாம் என்கின்றது பெங்களூரு வட்டாரம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.