சுட்டெரிக்கும் அதீத வெப்பம்.. கோடையுடன் முடியாது! புது குண்டை போட்ட சர்வதேச வானிலை மையம்! என்னாச்சு

ஜெனீவா: இப்போதே வெப்பம் நம்மை பாடாய் படுத்தி வரும் நிலையில், இந்த அதீத வெப்பம் இத்துடன் முடியாது என்று புதிய குண்டை சர்வதேச வானிலை மையம் போட்டுள்ளது. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.

இந்தாண்டு கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் வெளியே கூட செல்ல முடியாத அளவுக்கு வெப்பம் மிக மோசமாக இருக்கிறது. கோடைக் காலம் முடியும் வரை வெப்பம் இப்படி அதிகமாகவே இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோடைக் காலம் மட்டுமின்றி அடுத்த வரும் ஆண்டுகளிலும் வெப்பம் உச்சத்தில் தான் இருக்கும் என்று வல்லுநர்கள் வார்னிங் கொடுத்துள்ளனர். அதாவது அடுத்த வரும் ஆண்டுகளிலும் நமது பாடு திண்டாட்டம் தான்.

அதாவது 2023-2027 வரையிலான ஆண்டுகள் என்பது இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே வெப்பமான ஐந்தாண்டுக் காலமாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டதாக ஐநா தெரிவித்துள்ளது. பசுமை இல்ல வாயுக்களும் எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை உயர்த்துவதாக ஐநா எச்சரித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது ஓராண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட வெப்பத்தை விட வெப்பம் அதிகமாகும் என்றும் இதற்கு மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஐநாவின் சர்வதேச வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 முதல் 2022 வரை பதிவு செய்யப்பட்ட எட்டு ஆண்டுகள் தான் வெப்பமான ஆண்டுகளாக இருந்தது. ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை பதிவானதில் வெப்பமான ஆண்டாக இருக்கும். அதேபோல ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அடுத்த 5 ஆண்டுகளில் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.

Hottest 5 Years will begin at this year says World Meteorological Organization

1850 மற்றும் 1900க்கு இடையில் பதிவான சராசரி அளவை விட இரண்டு டிகிரி செல்சியஸுக்கு கீழ் வெப்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே 2015 பாரிஸ் உடன்படிக்கை ஆகும். இருப்பினும், 2022இல் உலகளாவிய சராசரி வெப்பநிலை 1850-1900 சராசரியை விட 1.15C அதிகமாக இருந்தது. 2023-2027 ஆண்டுகளில் இந்த இலக்கை கடந்து வெப்பம் அதிகரிக்க 66 சதவீத வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் இனி எப்போதும் வெப்பம் இந்தளவுக்கு அதிகமாக இருக்குமோ என அச்சப்படத் தேவையில்லை. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு இருப்பதை மட்டுமே உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் அதன் பிறகு வெப்பம் குறையவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் மாதங்களில் வெப்பத்தை ஏற்படுத்தும் எல் நினோ உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இத்துடன் மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றமும் உலக வெப்பத்தை அதிகப்படுத்தும். இது பல்வேறு விதங்களிலும் நம்மைப் பாதிக்கலாம் என்பதால் அனைத்தையும் கருத்தில் கொண்டு நாம் தயாராக வேண்டும்.

இது மத்திய மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் பகுதியில் வெப்பத்தை அதிகரிக்கும். இந்த வானிலை நிகழ்வு பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். ஜூலை இறுதிக்குள் எல் நினோ உருவாக 60 சதவீத வாய்ப்பும், செப்டம்பர் இறுதிக்குள் இது உருவாக 80 சதவீத வாய்ப்பும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Hottest 5 Years will begin at this year says World Meteorological Organization

பொதுவாக, எல் நினோ உருவானதற்கு அடுத்த ஆண்டு வெப்பம் அதிகரிக்கும். அதன்படி 2024இல் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாகக் குளிர்ச்சியை ஏற்படுத்தும் லா நினாவால் வெப்பம் கணிசமாகக் குறைந்த நிலையில், இப்போது எல் நினாவால் வெப்பம் அதிகரிக்க உள்ளது.

அதன்படி, அலாஸ்கா, தென்னாப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் 2023-ல் வெப்பநிலை 1991-2020 சராசரியை விட அதிகமாக இருக்கும். சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் இந்தாண்டு மட்டுமில்லை. அடுத்து வரும் ஆண்டுகளிலும் வெயில் நம்மை வைத்துச் செய்யவே போகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.