சென்னை: 2000 ரூபாய் நோட்டுல நானோ சிப்பெல்லாம் இருக்னுக்கு சிலர் பெரிய உருட்டு உருட்டுனாங்க… உங்க வாய் உங்க உருட்டு என்பது போல், அப்போது பலரும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் ஆன போது வதந்திகளை பரப்பினார்கள். அப்படி பரவிய வதந்திகளில் ஒன்றுதான் 2000 ரூபாய் நோட்டுல்ல நானோ சிப்பெல்லாம் இருக்குன்னு சொன்னது.
2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு 8 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சிகளில் தோன்றினார். அப்போது அவர் கூறுகையில், கருப்பு பணத்தை ஒழிக்க, புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் , 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார்.
2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் வரப்போவது குறித்தும் பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்படி 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் ஆன போது, அந்த நோட்டு குறித்து பல வதந்திகள் பரவின.
அதில் நானோ சிப் இருப்பதாக பரவிய வதந்தி பெரிய அளவில் வைரலானது. என்ன ஏது என்று யோசிக்கமாலேயே பலரும் நானோ சிப் 2000 ரூபாய் நோட்டில் இருப்பதாக நம்ப தொடங்கினார்கள். 2000 ரூபாய் நோட்டில் நானோ சிப் இருப்பதாகவும் அந்த நோட்டை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம் என்றும் சிலர் உருட்டினார்கள். இந்த உருட்டுக்களுக்கு எல்லாம் ஒரு கட்டத்தில் ரிசர்வ் வங்கியே முற்றுப்புள்ளி வைத்தது.
2000 ரூபாய் நோட்டில் எந்த ஒரு நானோ சிப்பும் இல்லை என்றும், அது சாதாரணமான மற்ற ரூபாய் நோட்டுகளை போன்ற ரூபாய் நோட்டு தான் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது. ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்த பின்னர் 2000 ரூபாய் நோட்டு குறித்து பரவிய வதந்திகள் முடிவுக்கு வந்தன.
ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பு என்ன? : ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வ அவை செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் மற்றும்/அல்லது பிற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் ” என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போதைய நிலையில் செல்லும் எனவே பயப்படத்தேவையில்லை. எனினும் வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து 500 ரூபாய் அல்லது வேறு நோட்டுக்களை வாங்கி கொள்ளலாம்
அதேநேரம் ரொக்க எக்ஸேன்ஞ் என்பத இப்போதைய நிலையில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நடைமுறைக்கு வருகிறது.
2000 நோட்டு திரும்ப பெறப்படுவது ஏன்: “சுமார் 89% ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டது. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ஆக இருந்தது. ஆனால் 2000 நோட்டுகள் ₹6.73 லட்சம் கோடியிலிருந்து ₹3.62 லட்சம் கோடியாக தற்போது (மார்ச் 31 2023) குறைந்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே 2000 நோட்டுகள். இந்த மதிப்பை பொதுவாக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் “சுத்தமான நோட்டுக் கொள்கையின்” படி, ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.