சென்னை: இந்தியாவில் ரெட்மி ஏ2 மற்றும் ஏ2 பிளஸ் என இரண்டு ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போன் வரும் 23-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி ஏ2 வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
ரெட்மி ஏ2 மற்றும் ஏ2 பிளஸ் சிறப்பு அம்சங்கள்
- இரண்டு போன்களும் 6.52 இன்ச் திரை அளவை கொண்டுள்ளன
- ஹெச்.டி பிளஸ் டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 ப்ராசஸர்
- 5,000mAh பேட்டரி
- 10 வாட்ஸ் திறன் கொண்ட இன்-பாக்ஸ் சார்ஜர்
- பின்பக்கத்தில் 8 மெகாபிக்சல் ட்யூயல் கேமரா சிஸ்டம்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது ஏ2 பிளஸ் போன். இதன் விலை ரூ.8,499
- அதுவே ஏ2 போன் மூன்று வேரியண்டில் வெளிவந்துள்ளது. முறையே 2ஜிபி + 32ஜிபி ரூ.5,999, 2ஜிபி + 64ஜிபி ரூ.6,499 மற்றும் 4ஜிபி + 64ஜிபி ரூ.7,499 என அறிவிக்கப்பட்டுள்ளது
The #RedmiA2 series is available at a starting price of just ₹5,999*. Hear it from #PankajTripathi below.
Watch the launch of #DeshKaSmartphone below:
https://t.co/GeYuwFJVj8 pic.twitter.com/qvGb0GaoWl— Redmi India (@RedmiIndia) May 19, 2023