திராவிட அரசியலை முன்னெடுத்து வரும் தமிழக முதலமைச்சர்
, வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் வெற்றிக்கு கவனமாக காய் நகர்த்தி வருகிறார். சமீபத்தில் நடந்த
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இதுபற்றி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். கூட்டணி குறித்தும் அவ்வப்போது ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தேசிய அளவில் அசுர பலத்துடன் விளங்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது ஒன்றே தீர்வாக முன்வைக்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் வியூகம்
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால் எனப் பலரும் தனித்தனியே அரசியல் செய்து வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இவர்களை ஒன்றிணைக்கும் புள்ளியில் மு.க.ஸ்டாலின் வருவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்புகளும் அதிகமிருக்கின்றன. பாஜகவிற்கு எதிராக சித்தாந்த ரீதியிலும், ஆட்சி அதிகாரத்திலும் சரிக்கு சரி மல்லுக்கட்டி நிற்பவர் என்ற பிம்பம் தேசிய அளவில் காணப்படுகிறது.
திமுகவும், ஸ்டாலினும்
குறிப்பாக தென்னிந்தியாவில் பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் வலுவாக நிற்பது திமுக தான் என்பதில் சந்தேகமில்லை. மோடி குறித்து காட்டமான கருத்துகளை தெரிவிக்கும் மம்தா பானர்ஜி கூட ஸ்டாலின் அளவிற்கு வர முடியாது என்று சில தலைவர்கள் பேசுவதை கேட்க முடிகிறது. தமிழகத்தில் தற்போது
உடன் நட்புறவாக கூட்டணியை தொடர்ந்து வருகிறது திமுக.
<p>Karnataka CM Invitation for MK Stalin</p>
ஒன்றிணையும் எதிர்க்கட்சிகள்
இது அடுத்து வரும் மக்களவை தேர்தலிலும் தொடரும் எனத் தெரிகிறது. அப்படியெனில் மாநில அளவில் செல்வாக்கு பெற்று விளங்கும் பிற கட்சிகள் ஒன்றிணையுமா? அந்த வேலையை நாட்டின் மூத்த கட்சியாக திகழும் காங்கிரஸ் செய்யுமா? வேறு யாராவது முன்னெடுப்பார்களா? என்ற கேள்வி தொக்கி நின்றது. இதற்கு கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பெரும் உத்வேகம் அளித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி
பாஜகவை வீழ்த்த முடியாது என்ற எண்ணத்தை காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, பிற கட்சிகளுக்கும் ஏற்படுத்தி தந்திருக்கிறது. இந்நிலையில் மே 20ஆம் தேதி பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் புதிய ஆட்சி மலர்கிறது. அன்றைய தினம் சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்கிறார். இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு புறப்படும் ஸ்டாலின்
மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர். இதை ஏற்றுக் கொண்ட ஸ்டாலின் நாளைய மாலை பெங்களூரு செல்ல முடிவு செய்திருக்கிறார். இந்த விழா வரும் மக்களவை தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்க அச்சாரம் போடும் வகையில் இருக்கும் என்றும், அதற்கு ஸ்டாலின் தொடக்கப் புள்ளியாக இருப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.