`பெருமையாவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது!' – ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து சூர்யா ட்வீட்!

தமிழகத்தில் பாரம்பரியமாக நடந்தும் வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்ச நீதிமன்றம் 2014 -ல் தடை விதித்திருந்தது.  இதனை எதிர்த்து 2017 இளைஞர்கள் உட்பட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவை பெரும் அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும்  ஏற்படுத்தி இருந்தது. பின்பு  மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்திருந்தது . அந்த அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த பின்  ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் தொடர்ந்து  நடைப்பெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போராட்டம்

இதனிடையே ஜல்லிக்கட்டை தடை செய்யக்கோரி அந்த அவசர சட்டத்திற்கு  `பீட்டா’ என்ற  விலங்குகள் நல வாரிய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்நிலையில், நேற்று  ஜல்லிக்கட்டு போட்டிகள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று சட்டம் இயற்றியிருக்கிறது.  அதனால் உச்ச நீதிமன்றம் அதில் தலையிட முடியாது இனிமேல் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருந்தது.

ஜல்லிக்கட்டு மட்டுமின்றி கர்நாடகாவில் பாரம்பரியமாக நடைபெற்று வரும்  கம்பாலா போட்டிக்கும் தடையை நீக்கியிருக்கிறது.  உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பிற்கு பலரும் வரவேற்பு அளித்திருந்த நிலையில் நடிகர் சூர்யாவும்  இதனை வரவேற்று ட்வீட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.      

அப்பதிவில் “ ஜல்லிக்கட்டு நம் கலாச்சாவாடிரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும்படி, உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கன்னடாவின் கம்பளாவிற்கும் அனுமதி அளித்திருப்பதும்  மகிழ்ச்சியாக உள்ளது. இரு மாநில அரசுக்கும், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.