மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதல் ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் பணி நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை.!!
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து மூவாயிரம் உபரி பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.
ஆனால், கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்ததால் கூடுதலாக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆசிரியா்களின் பணிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததால் அவா்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்குவதற்கான விரைவு ஆணையை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
இந்த அறிவிப்பின் படி அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பும் ஊதியமும் வழங்கப்படும்.
இருப்பினும், பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்த ஆசிரியர்களுக்கான பணி நீட்டிப்பும் தொடர்ந்து வழங்கப்படும். அதனால், இந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.