மீண்டும் பணமதிப்பிழப்பா? ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது ஏன்?


2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆனால், ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை இன்னும் முறைப்படி சட்டப்பூர்வமான டெண்டராக பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூ.2,000 மதிப்புள்ள கரன்சி நோட்டு நவம்பர் 2016-ல் RBI சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்து திரும்பப் பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன. பின்னர், 2018-19ல் ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

மீண்டும் பணமதிப்பிழப்பா? ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது ஏன்? | Rbi Ban 2000 Rs Note Reason 2016 DemonetisationPTI

ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான காரணம்

ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெற்றதற்கு ஒரு காரணம், பொது மக்களின் பரிவர்த்தனைகளுக்கு இந்த ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்த நோட்டுகளின் மதிப்பு பல ஆண்டுகளாக குறைந்து வருவதாகவும், மார்ச் 31, 2023 நிலவரப்படி ரூ.2,000 நோட்டுகளில் 10.8 சதவீதம் மட்டுமே புழக்கத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் இருப்பு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானது என்பது மற்றொரு காரணம். பொதுமக்களுக்கு நல்ல தரமான நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்யும் கொள்கையான “Clean Note Policy”-யின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மீண்டும் பணமதிப்பிழப்பா? ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது ஏன்? | Rbi Ban 2000 Rs Note Reason 2016 Demonetisation

இது 2016 ரூபாய் நோட்டு தடை (பணமதிப்பிழப்பு) போல் இல்லை.. என்?

2016-ஆம் ஆண்டு போல் அனைத்து ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படவில்லை. அவை பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாகப் பயன்படுத்த முடியாமல் போனது.

அனால், இப்போது ரூ. 2,000 மதிப்பிலான நோட்டுகள் தொடர்ந்து செல்லத்தக்கதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வ் வங்கி தனது செய்திக்குறிப்பில், மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை தங்களது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து, மே 23-ம் திகதி முதல் மற்ற மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து சட்டப்பூர்வமான டெண்டராக பயன்படுத்தலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Demonetisation, RBI, 2000 Rupees Note, Rs 2000 note



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.