வளர்ப்பு நாயால் லண்டன் பெண்மணிக்கு நேர்ந்த துயர முடிவு: விசாரணையில் அம்பலம்


லண்டனின் குரோய்டன் பகுதி பெண்மணி ஒருவர் கூட்டமாக நாய்கள் தாக்கியதில் மரணமடைந்த நிலையில், அவரது வளர்ப்பு நாயும் அவரது மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

ஓநாய்களின் கூட்டமாக மாறி

குரோய்டன் பகுதியை சேர்ந்த 28 வயது பெண்மணி நடாஷா ஜான்ஸ்டன் என்பவர் ஜனவரி 12ம் திகதி நடந்து சென்றுகொண்டிருக்கும் போது 8 நாய்களால் தாக்கப்பட்டு பரிதாபமாக மரணமடைந்தார்.

வளர்ப்பு நாயால் லண்டன் பெண்மணிக்கு நேர்ந்த துயர முடிவு: விசாரணையில் அம்பலம் | Woman Mauled Death By Pack Of Dogs @PA

இந்த வழக்கின் விசாரணையில், கூட்டமாக 8 நாய்கள் கொடூரமாக தாக்கியதில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மரணமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த நாய்கள் ஓநாய்களின் கூட்டமாக மாறி தாக்கியது எனவும், எட்டு விலங்குகளும் பின்னர் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்ரே காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், தண்டிக்கப்பட்ட ஒரே விலங்கு ஜான்ஸ்டனுக்கு சொந்தமானது என்றார்.
அத்துடன் தாக்குதலில் ஈடுபட்ட 8 நாய்களில் இரண்டை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும், ஐந்து நாய்கள் தனியார் விலங்கு காப்பகங்களில் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வளர்ப்பு நாயால் லண்டன் பெண்மணிக்கு நேர்ந்த துயர முடிவு: விசாரணையில் அம்பலம் | Woman Mauled Death By Pack Of Dogs @PA

மேலும், ஜான்ஸ்டனுக்கு சொந்தமான நாயை நித்திரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.