தமிழகத்தில் முதலமைச்சர்
தலைமையிலான திமுக ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டது. இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தனி முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக நலத்துறை செயல்பாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாநிலமாக தமிழகத்தை உயர்த்த ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு
ஆட்சிக்கு வந்த புதியதில் புள்ளிவிவரங்கள் பெரிதும் அதிர்ச்சியூட்டியன. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பலர் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் காணப்படுகின்றனர். வயதுக்கேற்ற எடை, உயரம் இல்லை. எனவே தமிழகத்தின் குழந்தைகளை திடமானவர்களாக ஆக்க வேண்டும் என்ற உறுதியுடன் பல்வேறு செயல்பாடுகளை முதலமைச்சர் முடுக்கி விட்டார். நடப்பாண்டு பிப்ரவரியில் ஏற்றமிகு 7 திட்டங்களில் ஒன்றான
”ஊட்டச்சத்தை உறுதிசெய்”
தொடங்கி வைக்கப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
இதன்மூலம் 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 1 லட்சத்து 11 ஆயிரத்து 216 குழந்தைகளுக்கு சிறப்பு உணவாக RUTF உணவு அளிக்கப்படுகிறது. 6 மாதத்துக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடைய 11 ஆயிரத்து 917 குழந்தைகளுக்கு தேவையான தாய்ப்பால் கிடைப்பதை உறுதிசெய்ய தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன.
சரவணன் சந்திரன் பதிவு
இந்த திட்டம் எந்த அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது என்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், எழுத்தாளர் சரவணன் சந்திரனின் பேஸ்புக் பதிவை சுட்டிக் காட்டியுள்ளார். அதில், அன்னை சத்யா நகரை சேர்ந்த தம்பி ஒருவனுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. ஆனால் எடை குறைவு. நேற்று திடீரென வந்த நின்ற அந்த தம்பி, ஒரு அரைமணி நேரம் வீடு வரைக்கும் ஓடி போயிட்டு வந்து விடுவதாக தெரிவித்தார்.
எடை குறைவு
சரி போய்விட்டு வா என்றேன். திரும்பி வந்தவனிடம் விசாரித்தால், பால்வாடியில் அழைத்தார்கள். மாசமா இருக்கும் போதே அட்டை போட்டு விடுவார்கள். இதுவரை 6,000 ரூபாய் வழங்கியுள்ளனர். எஞ்சிய 12,000 ரூபாய் கூடிய சீக்கிரம் வந்துவிடும் எனக் குறிப்பிட்டனர். குழந்தை எடை குறைந்து பிறந்ததால் கூடுதல் கவனிப்பு.
கூடுதல் கவனிப்பு
பேரிச்சம்பழம், ஹார்லிக்ஸ் பாட்டில், சத்து மாவு, நெய் டப்பா, துண்டு, பிளாஸ்டிக் டம்ளர், சத்து டானிக் இரண்டு பாட்டில் ஆகியவை அடங்கிய பெட்டகம் ஒன்றை வழங்கி விடுகின்றனர். இதுதவிர அடிக்கடி போன் போட்டு குழந்தையின் நலனை விசாரிக்கின்றனர். நேரில் தூக்கி வரச் சொல்லி பரிசோதிக்கின்றனர். என் மனைவி சரியாக சாப்பிட வேண்டும்.
நன்றி சொன்ன ஸ்டாலின்
அப்போது தான் பால் ஊறும்னு அறிவுரை வழங்குகின்றனர்.
பெத்த அப்பனை விட குழந்தையை நல்லா பாத்துக்குவாங்க
என்று பதிலளித்தார். இதை சுட்டிக் காட்டி ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தின் குழந்தைகள் அறிவுடன் திடமானவர்களாக வளர ஊட்டத்தை உறுதி செய்வோம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.