புதுடில்லி, ‘தி கேரளா ஸ்டோரி படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த படத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை விதிக்கக் கூடாது’ என, உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இந்த படத்துக்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக இப்படத்தில் காட்டப்படுகிறது.
இதற்கு எதிராக கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தப் படத்துக்கு, மேற்கு வங்க திரிணமுல் காங்., அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் இந்த படத்தை திரையிட்ட தியேட்டர்களின் முன் நடந்த போராட்டம் காரணமாக, தியேட்டர் உரிமையாளர் படத்தை திரையிட மறுத்து விட்டதாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் படக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில், ‘தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை. பாதுகாப்பு
தொடர்ச்சி 6ம் பக்கம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement