உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலையத்துக்கு அருகே இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதியில் இந்துக்கள் வழிபடும் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை மறுத்த மசூதி நிர்வாகம் தொழுகைக்கு முன்பு கை கால்ளை கழுவிக் கொள்ளும் இடம் என தெரிவித்தது.
இதையடுத்த அந்த சிவலிங்கம் போன்ற வடிவம் எந்த காலத்தை சேர்ந்தது என்பதை ஆய்வு வேண்டும் என லட்சுமி தேவி என்பவர் உட்பட 4 பெண்கள் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நாடினர் மனுதாரர்கள்.
Khushbu: காஞ்சிபுரம் பட்டில் கேன்ஸ் விருது விழாவில் கலக்கிய குஷ்பு… அசர வைக்கும் போட்டோஸ்!
இந்த மனுவை கடந்த 12 ஆம் தேதி விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிவலிங்கம் போன்ற வடிவத்தின் காலத்தை தெரிந்து கொள்ள அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் அந்த வடிவத்துக்கு எந்த சேதமும் ஏற்படக் கூடாது என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
அலகாபாத் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஞானவாபி மசூதியின் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் போன்ற வடிவத்தில் கார்பன் டேட்டிங் உட்பட தடயவியல் சோதனை நடத்த அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Duraimurugan: ஸ்டாலினுக்கு வந்த புது பிரச்சனை… அமைச்சர் துரைமுருகன் மீது ஆளுநரிடம் ‘தகவல் தாத்தா’ புகார்.. பரபரப்பு!
காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள இந்த மசூதி முகலாய மன்னர் ஔரங்கசீப் காலத்தில் அமைக்கப்பட்ட என்றும், மன்னர் ஔரங்கசீப் உத்தரவின் பேரில் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என்று இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.