சென்னை: Leo Story (லியோ கதை)லியோ படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் குறித்த புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.
வாரிசு படத்துக்கு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தில் தொடங்கி மல்லுவுட் நடிகர் மாத்யூ தாமஸ்வரை ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். த்ரிஷா, ப்ரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் என பலர் நடிக்கின்றனர். இதனால் லியோவில் செம ட்ரீட் இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.
எப்போது முடிகிறது ஷூட்டிங்?: படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் நடைபெற்றது. இதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோ, பையனூர் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது. பையனூர் ஷெட்யூலை முடித்துவிட்டு ஆதித்யராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துவருகிறது. ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் சூழலில் ஜூன் மாதல் வாரம் அலல்து இரண்டாவது வாரத்தில் ஒட்டுமொத்தமாக ஷூட்டிங் முடிந்துவிடும் என தகவல் கசிந்துள்ளது.
என்ன கதை?: சூழல் இப்படி இருக்க லியோ படத்தின் கதை குறித்த தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. அதன்படி, பாட்ஷா படத்தில் ரஜினி எப்படி மிகப்பெரிய டானாக இருந்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்துவிட்டு அமைதியாக சென்னையில் வாழ்வாரோ; அதேபோல் மிகப்பெரிய கேங்ஸ்டரான விஜய் தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் வாழ்வார். அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் கதை என கூறப்படுகிறது.

அர்ஜுனுக்கு என்ன கேரக்டர்?: அதேபோல் விஜய் இதில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கலாம் எனவும் சிலர் பேசுகின்றனர். மேலும் அர்ஜுன் இதுவரை ஏற்காத கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அவர் விஜய்க்கு முதலில் நண்பராக இருந்துவிட்டு துரோகியாக மாறுவது போன்றுதான் அவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என முதலில் கூறப்பட்ட சூழலில் அதெல்லாம் இல்லை விஜய்க்கு சகோதரராக அர்ஜுன் நடித்திருக்கிறார் என லேட்டஸ்ட் தகவல் வெளியானது.
சஞ்சய் தத்துக்கு என்ன ரோல்?: இப்படி பல தகவல்கள் உலாவிக்கொண்டிருக்க கேஜிஎஃப்பில் வில்லனாக கலக்கிய சஞ்சய் தத்துக்கு என்ன ரோல் என பரவலாக பேசப்பட்டது. அவர்தான் படத்தின் மெயின் வில்லனாக இருப்பார் எனவும் கணிக்கப்பட்டது. இந்நிலையில் சஞ்சய் தத்தின் கேரக்டர் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி விஜய்க்கு தந்தையாக நடிக்கவிருப்பதே சஞ்சய் தத்தானாம். அவரும் படத்தில் கேங்ஸ்டராகத்தான் நடித்திருக்கிறாராம்.

லியோ கதை என்ன?: மெயின் வில்லன் சஞ்சய் தத்தான் என கூறப்பட்ட சூழலில் இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. விஜய்க்கு சஞ்சய் தத்தான் அப்பா என்று வெளியான தகவலை அடுத்து விஜய்க்கு அப்பா சஞ்சய் தத் என்றால் அப்போ அப்பாவை எதிர்க்கும் மற்றொரு கேங்ஸ்டர் விஜய்யா, விஜய்யும், அர்ஜுனும் சகோதரர்களாக நடித்திருக்கின்றனரா, ஒரு கேங்ஸ்டர் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னைகள்தான் லியோ படத்தின் கதையா என பல கணிப்புகளை சமூக வலைதளங்களில் கேள்விகளாக முன்வைத்துவருகின்றனர் ரசிகர்கள். லியோ படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.