வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் மேற்குவங்க முதல்வர் மம்தா கலந்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளார். அதற்குப் பதில் தனது பிரதிநிதியாக அவரது கட்சியின் துணை தலைவரை அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார்.
நாளை (மே.20) கர்நாடகாவில் நடக்கும் முதல்வர், துணை முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சியின் தலைவர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க முடிவு செய்துள்ளார். இன்னும் பங்கேற்கும் தலைவர்கள் யார் யார் என வெளிப்படையாக தெரியாமல் உள்ளது.
எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் காங்கிரஸ் எண்ணமாக பதவியேற்பு விழாவுக்கு பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மம்தா புறக்கணித்திருப்பது எதிர்காலத்தில் பா.ஜ., வை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைவது அவ்வளவு சாத்தியமில்லை என்றே தான் தோன்றுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement