நடிகர்கள்: ரிது வர்மா, வைபவ்இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்இயக்கம்: கிருஷ்ணாகுமார் ராம்குமார்ஓடிடி: அமேசான் பிரைம்
சென்னை: மாடர்ன் லவ் சென்னை என்பதற்கு பதிலாக அரேஞ்சட் மேரேஜ் சென்னை என வைத்திருக்கலாம் என்றே ஒவ்வொரு கதையையும் பார்க்கும் போதும் தோன்றுகிறது.
லாலாகுண்டா பொம்மைகள் போல ரிது வர்மா நடித்த காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி படத்திலும் நாயகி பெற்றோர்கள் பார்த்த மாப்பிள்ளையையே கடைசியாக திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்.
ஆனால், அதற்கு முன்னதாக காதலிக்கிறேன் என்கிற பெயரில் அவர் பண்ணும் சம்பவங்கள் எல்லாம் எப்படி இருக்கு? ஒரு சீனுக்கு வந்து செல்லும் இயக்குநர் கிருஷ்ணா என்ன இம்பேக்ட்டை கொடுக்கிறார் உள்ளிட்ட முழு விமர்சனத்தையும் இங்கே பார்க்கலாம் வாங்க..
காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி: இந்த காலத்து லவ்வுக்கு ஏற்றமாதிரி டைட்டிலையே வித்தியாசமாக வைத்து விட்டார் கிருஷ்ணா. ஆம் அதே ஃபைவ் ஸ்டார், திருடா திருடி, திருமலை படத்தில் நடித்த அதே கிருஷ்ணா தான். ரிது வர்மா, வைபவ் நடிப்பில் உருவாகி உள்ள இந்த கதையில் சினிமாவை அதிலும் காதல் படங்களை அதிகம் பார்க்கும் ஹீரோயின் தனக்கும் அதே போன்ற காதல் வாழ்க்கை அமைய வேண்டும் என்றும் காதல் கணவர் கிடைக்க வேண்டும் என சாமியை வேண்டுகிறார்.
பிளஸ் 2 எக்ஸாமில் பரீட்சைக்கு நடுவே மழையில் ஆட்டம் போடுவது போல கனவு காண்பது, முட்டை பப்ஸுக்கு அழையும் மாணவனை லவ் பண்ணுவது, அவன் டெல்லிக்கு கிளம்பிச் செல்ல கல்லூரியில் ஒரு ராக்ஸ்டாரை காதலிப்பது, மால் பார்க்கிங்கில் இன்னொரு பெண்ணுக்கு காரில் அந்த இளைஞர் லிப் லாக் அடித்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு டென்ஷன் ஆவது என இவ்ளோ அழகா இருக்குற ரிது வர்மாவுக்கு ஒரு லவ் கூட செட் ஆகாமல், அவங்க தங்கச்சி ஆரம்பத்தில் சின்ன பொண்ணாக காட்டும் அந்த பெண்ணுக்கே திருமணம் ஆகி விடுவது என வழக்கமாக தனுஷுக்கு நடக்கும் கதையை ரிது வர்மாவுக்கு மாற்றி இருக்கிறார் இயக்குநர்.
காதல் தோல்விக்கு பிறகு சாப்பாட்டை தவிர என் ரூமுக்கு எதுவும் வரக் கூடாது என சொல்லி விட்டு படையப்பா நீலாம்பரி போல மீண்டும் காதல் படங்களை போட்டு பார்ப்பது, வெளியே வரும் போது திடீரென அவரது அப்பா கூலிங் கிளாஸை எடுத்து மாட்டி விட்டு நான் சரியாகி விட்டேன் என சொல்வது என சினிமாத்தனமாக சில இளைஞர்கள் வாழ்க்கையை நடத்துவதை படமாக்கிய விதத்தில் ரசிகர்களை இயக்குநர் கவர்கிறார்.
ரிது வர்மா மிரட்டல் பர்ஃபார்மன்ஸ்: பள்ளி மாணவியாக, கல்லூரி மாணவியாக நிறைய பீட்ஸா, பர்கர், பிரியாணின்னு அந்த அடைபட்ட ரூமில் சாப்பிட்டு தொப்பைப் போடும் பெண்ணாக, படுக்கையறை காட்சிகளில் எல்லாம் முடிந்து விட்டு அந்த அடுத்த காதலர் நீங்க என்ன ஆளுங்க என கேட்டதும் பல்ப் வாங்கும் காட்சி என படு யதார்த்தமாக நடித்துள்ளார்.
கடைசியில் வைபவை திருமணம் செய்துக் கொண்டு அந்த மழையில் முதலிரவு அன்று ஆட்டம் போடும் சீன் வரை பர்ஃபார்மன்ஸில் மிரட்டி எடுத்திருக்கிறார்.
பிளஸ்: ரிது வர்மாவின் நடிப்பு கதை ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சிறப்பாக உள்ளது இந்த காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி படத்தின் பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு, ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை என அனைத்துமே பாசிட்டிவ் தான்.
பரத்வாஜ் ரங்கநாதன் வரும் காட்சியில் சினிமாவில் வரும் காதல் பற்றியும் நிஜக் காதல் பற்றியும் விளக்கம் கொடுத்த பின்னர் நீ ஒரு இங்கிலீஷ் பேசுற ப்ளூ சட்டை என ரிது வர்மா திட்டி விட்டு செல்வது எத்தனை இயக்குநர்களின் சாபம் என்று தான் தெரியவில்லை.
மைனஸ்: எல்லா கதைகளிலும் மேட்டர் ஒரு பெரிய மேட்டரே இல்லை என்பதை திணிப்பது போலவே கதை இருப்பது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. மேலும், எலைட் பெண்கள் தண்ணி அடிப்பது, காதலித்தாலே இளைஞர்கள் ஏமாற்றுவார்கள், ஒரு காதல் போனால் இன்னொரு காதல் வரும் ஆனால், அந்த காதலும் ஏமாற்றும், கடைசியில் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் மாப்பிள்ளை நல்லவனாக அமைந்து விடுவான் என்பது போன்ற கதைகளே நிரம்பி இருப்பதால் மாடர்ன் லவ் சென்னையும் இந்த காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜியும் பெரிதாக கவரவில்லை.