வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ரூ. 2000 நோட்டுகள் வெளியிடுவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் செப்.30 வரை 2000 நோட்டுகள் செல்லுபடியாகும் எனவும் அதிரடியாக அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு, நவ.8 ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது புழக்கத்திலிருந்த, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவிக்கப்பட்டு, புதிதாக 2,000, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
|
நாளடைவில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதையும் ஆண்டுக்கு ஆண்டு மத்திய அரசு குறைத்து வந்தது. பின்னர் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
* கிளீன் நோட் பாலிஸி என்ற அடிப்படையில் ரூ. 2000 நோட்டுகளை திரும்பபெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதையடுத்து ரூ. 2000 நோட்டுகள் வெளியிடுவதை வங்கிகள் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
* கையிருப்பில் வைத்துள்ள ரூ. 2000 நோட்டுகளை வரும் 23 ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரை வங்கியில் டிபாசிட் செய்யலாம். ஒரு நாளைக்கு ரூ. 20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.
* ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும் செப். 30-ம் தேதி வரையே செல்லுபடியாகும்.
*சாதாரண பரிவர்த்தனைகளில் ரூ. 2000 நோட்டு பயன்படுத்துவது குறைந்துள்ளதையடுத்து மேற்கண்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
*புழக்கத்தில் உள்ள மற்ற ரூபாய் நோட்டுகள் தேவைக்கு போதுமானதாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement