புதுடில்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தி யு.பி.ஐ., பணபரிவர்த்தனை முறையை ஜப்பான் ஏற்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எளிதாக பணம் பெறுவதற்கு, செலுத்துவதற்கு மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ. முறை வெற்றிகரமான பணபரிவர்த்தனை சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது.
இந்தியா -சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ., பண பரிவர்த்தனையை கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைத்தார்.
இதனை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பு கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் ஜப்பான் அரசு யு.பி.ஐ., முறையை ஏற்று இணைவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அந்நாட்டு அரசு அறிவிக்கலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement