Walk Sheer Submarine Begins Sea Trials | வாக் ஷீர் நீர்மூழ்கி கப்பல் கடல் சோதனை துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி :உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக் ஷீர்’ அடுத்த ஆண்டு கடற்படையில் சேர்க்க உள்ள நிலையில், இதற்கான சோதனைகள் துவங்கின.

இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் – 75’ திட்டத்தின் கீழ், நம் கடற்படைக்கு ஆறு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இந்திய

கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.

latest tamil news

ஆறாவதும், இறுதியுமான இந்த வாக் ஷீர் நீர்மூழ்கிக் கப்பலையும் மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த மாஜேகான் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் தயாரித்தது.
இந்த கப்பலை கடலில் செலுத்தி செய்யப்படும் சோதனைகள் முறைப்படி துவங்கின.இது குறித்து கடற்படை அதிகாரிகள் கூறுகையில், ‘உந்துவிசை அமைப்புகள், ஆயுதங்கள் மற்றும் சென்சார் ஆகியவற்றின் செயல்பாடுகள் உள்ளிட்ட பரிசோதனைகள், அடுத்த சில மாதங்களுக்கு மேற்
கொள்ளப்படும். பின், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இது நம் கடற்படையில் சேர்க்கப்படும்.

‘அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல்,தற்சார்பு இந்தியா என்ற முழக்கத்துக்கு ஏற்ப, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது’ என்றனர். இந்திய கடற்பகுதியில், நம் அண்டை நாடான சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில், நம் கடற்படைக்கு வலு சேர்க்கும் விதமாக வாக் ஷீர் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.